September 29, 2010

உன் கண்களை நேர்நோக்கிப் பேசும்
சக்தி எனக்கிருந்திருந்தால்
என்னிடம் இத்தனை
காதல் புலம்பல்கள் இருந்திருக்காதோ?

September 28, 2010

உனக்குத் தெரியாமல் நானும்,
எனக்குத் தெரியாமல் நீயும்,
நமக்காகக் காத்திருக்கிறோம்...

September 21, 2010

உன் வெட்கம் என்னும் மந்திரக்கோலில்
என்னை ஆட்டுவிக்கும்
ஒரு மந்திரக்காரி நீ ....

September 20, 2010

உன் பதில் 
மௌனமாய்த்தான் இருக்குமென்று தெரிந்தாலும்
உனக்கான என் கடிதங்கள் 

பேசிக்கொண்டேதான் இருக்கும்....

September 15, 2010

நம் பழைய புகைப்படங்கள்
புதிய சந்தோஷங்களை
உருவாக்குகின்றன ..............