என் நீயும், உன் நானும் ...
April 16, 2013
என் அங்கம் எங்கும், உன் இதழ்களின் நகல்கள்
உன் அங்கம் எங்கும், என் விரல் நகங்களின் நகல்கள்
- இது இன்னுமொரு தேனிலவு நாள்
முன்னிரவு: நீ நண்பன், உன் வெட்கம் எதிரி
பின்னிரவு: நீ எதிரி, உன் வெட்கம் நண்பன்
- இது இன்னுமொரு தேனிலவு நாள்
நீ சிவந்து போகிறாய்
இரவு நிறமிழந்து போகிறது
- இது இன்னுமொரு தேனிலவு நாள்
நாமும் இதழ்களும் ஒட்டிக்கொள்வோம்,
கிழக்கும் விடியலும் வெட்டிக்கொள்ளட்டும்.
- இது இன்னுமொரு தேனிலவு நாள்
முத்தங்களில் ஏனடி இடைவெளி?
இடைவெளிகளில் முத்தங்கள் பிறக்கட்டும்
- இது இன்னுமொரு தேனிலவு நாள்
உன் இதழ் ரேகையில்
என் இரவின் ஆயுள்.
- இது இன்னுமொரு தேனிலவு நாள்
மன்னவன் நீ கலைஞன்
மங்கை நான் வீணை
உன் தீண்டல்களில் என் ராகங்கள்
என் மௌன முத்தங்களில் நீயும்
உன் மௌனத் தீண்டல்களில் நானும்
கரைந்து போகின்றோம்...
இப்படியே நீளாதா இந்த இரவு?
April 02, 2013
நானும் என் இதழ்களும்
தவங்கள் இருக்கிறோம்
உனக்காக....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)