August 08, 2016

அழகுகள் களவாடப்படும்
அழகான களவுகள்.
களவுகள் அழகாக்கப்படும்
களவான அழகுகள்.
# இன்னுமொரு தேன் நிலவு நாள்.
வெட்கத்தில் தொடங்கி
காதல் வரை முன்னிரவு.
காதலில் தொடங்கி
வெட்கம் வரை பின்னிரவு.
# இன்னுமொரு தேன் நிலவு நாள்.
வெட்கச் சிப்பியின்
முத்து மகள் நீ.
காதல் சிப்பியின்
முத்து மகன் நான்.
# இன்னுமொரு தேன் நிலவு நாள்.
முத்தங்களைத் திருடிக் கொள்,
இதழ்களை என்னிடமே விட்டுவிடு.
என்னைத் திருடிக் கொள்,
உன்னை என்னிடமே விட்டுவிடு.
# இன்னுமொரு தேன் நிலவு நாள்.