என் நீயும், உன் நானும் ...
September 16, 2018
உன் முத்தங்களை
என் முத்தங்களோடு
கொண்டாடிக் களிப்போம்
# முத்தங்களின் காதலி
September 05, 2018
அருகில் வா,
இது இதழ்கள் இணையும்
மௌன மொழி.
# முத்தம் எனும் குறுங்கவிதை
பிழையும், பிழைத்திருத்தமும்
பிழையில்லாமல் செய்யப்படும்.
# முத்தம் எனும் குறுங்கவிதை.
உன் முத்தங்களைத்
திருடும் வேளைகளில்,
என் முத்தங்கள்
தொலைந்து போகின்றன.
# முத்தம் எனும் குறுங்கவிதை
July 09, 2018
அழகின் அகராதி நீ,
அழகுக்கும் அகராதி நீ.
# என் தேசத்தின் ஒரே அழகி
May 21, 2018
உனக்கும் நமக்கும் இடையே நான்
எனக்கும் உனக்கும் இடையே மௌனம்
எனக்கும் நமக்கும் இடையே காதல்
# நான், நீ, நம் காதல்
May 14, 2018
நீ யார்? நான் யார்? நாம் யார்?
கேள்விகள் ஆயிரம்.
பதில் ஒன்று மட்டும்தான்
நான் உன்னைக் காதலிக்கின்றேன்
# நான், நீ, நம் காதல்
May 09, 2018
தேர்வு நாட்களில்
வினாத்தாள் முழுதும் உன் முகம்
விடைத்தாள் முழுதும் உன் பெயர்
# நம் கல்லூரி நாட்கள்
உன் நிழலைக் கேட்டுப்பார்,
நான் உன்னைப் பின்தொடர்ந்த கதைகளை
பல யுகங்களுக்கு சொல்லும்
# நம் கல்லூரி நாட்கள்
உன் திமிருக்கும் அழகென்று பெயர்,
உன் அழகிற்கும் திமிரென்று பெயர்.
# நான், நீ, நம் காதல்
May 08, 2018
நீ வகுப்பறைக்கு வராத நாட்களில்
என்னோடு நானே
யுத்தமிட்டுக் கொள்கின்றேன்
# நான், நீ, நம் காதல்
நம் பெயர்
செதுக்கப்பட்ட கல்லூரி மரம்,
காதல் பறவைகளின் சரணாலயம்.
# நான், நீ, நம் காதல்
May 07, 2018
நிறைய எழுத்துப் பிழைகள்
நிறைய இலக்கணப் பிழைகள்
ஆனால், காதல் பிழையின்றி
# என் முதல் காதல் கடிதம்
உன் விழிகளும் உதடுகளும்
மின்சாரம் தாங்கினால்,
எப்படி உன்னைக் காதலிப்பது?
# எனக்கு நீ, உனக்கு நான்
May 06, 2018
நீயிருக்கையில்
எனக்கெதற்கடி தனி முகவரி?
# நான், நீ, நம் காதல்
உன் உதட்டு ரேகைகளில்
எந்த ரேகை, முத்த ரேகை?
என் களவு விழிகள் கொண்டு
உளவு பார்க்கின்றேன்
# நான், நீ, நம் காதல்
நீ
அவ்வளவு அழகு
அவ்வளவும் அழகு
# நான், நீ, நம் காதல்
இங்கு
காதலிக்க கற்றுத்தரப்படும்,
உனக்கு மட்டும்.
# நான், நீ, நம் காதல்
May 05, 2018
காற்றில் கரைக்கின்றேன்
நமக்கான என் வலிகளை.
எனக்கு எட்டும் தொலைவில்
நீ இல்லை.
# நான், நீ, நம் காதல்
உன் முத்தங்களை
மடல்களில் அனுப்பாதே,
காற்று
அவைகளைக் கடத்திப் போகின்றது.
# நான், நீ, நம் காதல்
உனக்காக காதலிக்கின்றேன்,
உன்னைக் காதலிக்கின்றேன்,
நம்மைக் காதலிக்கின்றேன்.
# நான், நீ, நம் காதல்
May 04, 2018
உன் மௌனத்தால்
என் விரல் நகங்களுக்கு
தினமும் மரண தண்டனைகள்.
# நான், நீ மற்றும் என் காதல்
April 27, 2018
எனைக் கடந்து செல்கிறாய் நீ,
வெப்பம் கலந்த மின்சாரத்தில்
என் இதயம்
ஒரு முறை நனைத்து எடுக்கப்படுகின்றது
# நான், நீ மற்றும் என் காதல்
இரவு முழுவதும் என்னிடம்
உன்னைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்
# நான், நீ மற்றும் என் காதல்
April 26, 2018
உன் மௌனம்
உனக்கு மொழியாவதற்குள்
என்னைக் காதலித்துவிடு.
# நான், நீ மற்றும் என் காதல்
ஒரு பார்வையை வீசிவிட்டு போயேனடி,
மரணிக்கப்பட
என்னிடம் மீதமில்லை விரல் நகங்கள்.
# நான், நீ மற்றும் என் காதல்
April 25, 2018
இரண்டே இதழ்களுக்குள்
எப்படி ஒளித்து வைத்திருக்கிறாய்
எனக்கான ஆயிரமாயிரம் முத்தங்களை?
# உன் புகைப்படம்
கவிதைகளால் இணைந்த ஓவியம்,
ஓவியங்களால் இணைந்த கவிதை.
# உன் புகைப்படம்
April 16, 2018
எல்லைக் கோடுகளை
உடைக்க முனைகிறேன்,
நீயோ என்னை
தனித் தீவுகளில் சிறையிடுகிறாய்.
# என் காதல், உன் மௌனம்
April 12, 2018
உன் இதழ்கள்,
சொர்க்கத்தின் நகல்கள்.
உன் மௌனங்கள்,
நரகத்தின் நகல்கள்.
# என் காதல், உன் மௌனம்
April 06, 2018
கசங்காத மல்லிகைகள்
என்னை ஏளனம் செய்கின்றன.
# நம் தேன்நிலவு நாட்கள்
April 04, 2018
சிவந்து உதிர்ந்தன, ஒரு பாதி
உதிர்ந்து சிவந்தன, மறு மீதி.
என் ஒரு முழம் மல்லிகை.
# நம் தேன்நிலவு நாட்கள்
நம் இதழ்கள் பேசும் ரகசியங்களை
இரவு அறியும்.
இரவின் ரகசியங்களை
நாம் அறிவோமடி.
# நம் தேன்நிலவு நாட்கள்
April 03, 2018
இடைவெளியை நீ நிரப்பு,
இடைவெளிகளை நாம் நிரப்புவோம்.
# நம் தேன்நிலவு நாட்கள்
April 02, 2018
உன் இதழ்களை சம்மதிக்க வைக்க
நான் எதற்கடி?
என் இதழ்கள் போதாதா?
# நம் தேன்நிலவு நாட்கள்
April 01, 2018
இரவுகளில் இரவல்கள்,
இரவல்களிள் இரவுகள்.
# நம் தேன்நிலவு நாட்கள்
March 15, 2018
என் மொழி, உனக்கு மௌனம்
உன் மௌனம், எனக்கு மொழி
# என் காதல், உன் மௌனம்
ஊசி கொண்டு
சிலை செதுக்கச் சொல்கிறாய் நீ.
# என் காதல், உன் மௌனம்
February 17, 2018
இரவைக்
கவிதையாக்குபவள் நான்,
இரவின் மீதங்களைக்
கவிதையாக்குபவன் நீ.
# என் வெட்கங்களின் பிரம்மா நீ.
February 04, 2018
உன் காதல்
மௌன விரதம் இருப்பதால்,
என் காதல்
பட்டினி விரதம் இருக்கின்றது.
# நானும், உனக்கான என் காதலும்
February 03, 2018
உனக்கு, என்னைத் தெரியவில்லையா?
இல்லை, காதலிக்கவும் தெரியவில்லையா?
# நானும், உனக்கான என் காதலும்
February 02, 2018
உன் விரல் நுனி மின்சாரத்தில்
ஒளிர்பவள் நான்.
# என் வெட்கங்களின் பிரம்மா நீ
நம் தேன்நிலவு நிமிடங்களை
இரவு ஒட்டுக் கேட்கிறது,
நிலவு உளவு பார்க்கிறது.
# நம் தேன்நிலவு நாட்கள்
January 31, 2018
ஒரு கோப்பை தேநீர்,
ஒரு கோப்பை காதல்.
இன்னும் அழகாவோம் நாம்.
# என் வெட்கங்களின் பிரம்மா நீ
January 30, 2018
அவன்:
நீ வெட்கப்பட்டால்
நான் விலகிப் போவேனா என்ன?
நான்:
நீ விலகிப் போகவேண்டாம் என்பதற்க்காகவே
நான் வெட்கப்படுகிறேன்
# என் வெட்கங்களின் பிரம்மா நீ
நான்:
நான் ஆடை மாற்றும் அறையில்
உனக்கு என்ன வேலை?
அவன்:
நீ ஆடை மாற்றுகையில்
எனக்கு ஏது வேறு வேலை?
# என் வெட்கங்களின் பிரம்மா நீ.
January 29, 2018
தோற்கடிக்க வருகிறாயா?
இல்லை, தோற்றுப்போக வருகிறாயா?
# என் வெட்கங்களின் பிரம்மா நீ.
January 16, 2018
வெட்கப்பட வருகிறேன்,
வெட்கப்பட்டு வருகிறேன்.
# என் வெட்கங்களின் பிரம்மா நீ
ஒரு விரலில் வெட்கங்கள் உடைக்கிறாய்,
மறு விரலில் வெட்கங்கள் படைக்கிறாய்.
# என் வெட்கங்களின் பிரம்மா நீ
January 15, 2018
நா வறண்டு போய்விட்டது.
ஒரு குவளை வார்த்தைகள் கிடைக்குமா?
# நம் முதல் சந்திப்பு
January 11, 2018
உன் வெட்கமும், என் நடுக்கமும்
நம்மை நகைத்த தருணங்கள்.
# நம் முதல் சந்திப்பு
January 10, 2018
மௌனமாகிப் போன விழிகள்,
மௌனமாகிப் போன மொழிகள்,
பேசிக்கொண்ட மௌனங்கள்.
# முதலாம் சந்திப்பு
இதயமெங்கும்
மின்சார உலா வருகின்றது.
# முதலாம் சந்திப்பு
January 09, 2018
நீ, நான் மற்றும் பதற்றம்.
# முதலாம் சந்திப்பு
வெட்கம் வைத்து
வசியம் செய்பவள் நான்.
முத்தம் வைத்து
வசியம் செய்பவன் நீ.
# என் மொத்தக் கள்வன் நீ.
January 08, 2018
வெட்கமே
வெட்கப்பட்டுப் போகிறது.
மங்கை எனக்கேது விதிவிலக்கு?
# என் மொத்தக் கள்வன் நீ.
ரகசியம் திருடுகிறாயா?
இல்லை ரகசியமாய் திருடுகிறாயா?
# என் மொத்தக் கள்வன் நீ
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)