January 31, 2018

ஒரு கோப்பை தேநீர்,
ஒரு கோப்பை காதல்.
இன்னும் அழகாவோம் நாம்.
# என் வெட்கங்களின் பிரம்மா நீ

January 30, 2018

அவன்:
நீ வெட்கப்பட்டால்
நான் விலகிப் போவேனா என்ன?
நான்:
நீ விலகிப் போகவேண்டாம் என்பதற்க்காகவே
நான் வெட்கப்படுகிறேன்
# என் வெட்கங்களின் பிரம்மா நீ
நான்:
நான் ஆடை மாற்றும் அறையில்
உனக்கு என்ன வேலை?
அவன்:
நீ ஆடை மாற்றுகையில்
எனக்கு ஏது வேறு வேலை?
# என் வெட்கங்களின் பிரம்மா நீ.

January 29, 2018

தோற்கடிக்க வருகிறாயா?
இல்லை, தோற்றுப்போக வருகிறாயா?
# என் வெட்கங்களின் பிரம்மா நீ.

January 16, 2018

வெட்கப்பட வருகிறேன்,
வெட்கப்பட்டு வருகிறேன்.
# என் வெட்கங்களின் பிரம்மா நீ
ஒரு விரலில் வெட்கங்கள் உடைக்கிறாய்,
மறு விரலில் வெட்கங்கள் படைக்கிறாய்.
# என் வெட்கங்களின் பிரம்மா நீ

January 15, 2018

நா வறண்டு போய்விட்டது.
ஒரு குவளை வார்த்தைகள் கிடைக்குமா?
# நம் முதல் சந்திப்பு

January 11, 2018

உன் வெட்கமும், என் நடுக்கமும்
நம்மை நகைத்த தருணங்கள்.
# நம் முதல் சந்திப்பு

January 10, 2018

மௌனமாகிப் போன விழிகள்,
மௌனமாகிப் போன மொழிகள்,
பேசிக்கொண்ட மௌனங்கள்.
# முதலாம் சந்திப்பு
இதயமெங்கும்
மின்சார உலா வருகின்றது.
# முதலாம் சந்திப்பு

January 09, 2018

நீ, நான் மற்றும் பதற்றம்.
# முதலாம் சந்திப்பு
வெட்கம் வைத்து
வசியம் செய்பவள் நான்.
முத்தம் வைத்து
வசியம் செய்பவன் நீ.
# என் மொத்தக் கள்வன் நீ.

January 08, 2018

வெட்கமே
வெட்கப்பட்டுப் போகிறது.
மங்கை எனக்கேது விதிவிலக்கு?
# என் மொத்தக் கள்வன் நீ.
ரகசியம் திருடுகிறாயா?
இல்லை ரகசியமாய் திருடுகிறாயா?
# என் மொத்தக் கள்வன் நீ