நீ + ஆடை = பேரழகு
நீ - ஆடை = கொள்ளை அழகு
இப்போதைக்கு,
ஒரு கேள்வி மட்டும்தான்.
இன்னும் தொடரவா?
இல்லை புதிதாய்த் தொடங்கவா?
உன் இரகசியங்கள் ÷
என் இரகசியங்கள் +
நம் இரகசியங்கள் =
இரவின் இரகசியங்கள்.
இந்த இரவு கரைவதற்குள்
உன் வெட்கம் கரையட்டும்
உன் இதழ்கள் அங்காடியில்
முத்தங்கள்
விற்பனைக்கு மட்டுமா?
கொஞ்சம் வாடகைக்கும் கிடைக்குமா?