என் நீயும், உன் நானும் ...
June 10, 2013
இரவு கரையட்டும், அழகு வளரட்டும்
அழகு கரையட்டும், இரவு வளரட்டும்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
அழகாகும் என் களவுகள்
களவாகும் உன் அழகுகள்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
மொழி மறந்த இலக்கணங்கள்
இலக்கணம் மறந்த மொழிகள்
முத்தங்கள் எழுத்துக்களாய்.
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
என் தீண்டலில், உன் ராகங்கள்
என் ராகங்களில், உன் தீண்டல்கள்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
உன் இதழ்களின் மௌனங்களும்
என் இதழ்களின் மௌனங்களும்
இப்போது கவிதைகளாய்.
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
May 16, 2013
உன் புடவைப் பூக்களிலும்
தேன் தேடச் சொல்கிறது என் இரவு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
எந்த இதழில் இந்தத் தித்திப்பு?
இன்னொரு முறை இனித்துக் கொள்ளவா !!
இன்னுமொரு மேகம், இன்னுமொரு மழைத்துளி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)