என் ஜாதகத்தின் அனைத்துக் கட்டங்களிலும் உன் பெயரே வரையப்பட்டிருக்க, குரு பெயர்ச்சியும், ராகு பெயர்ச்சியும் ஜோசியருக்கு எப்படித் தெரியும்?
என் ஜாதகத்தில் பரிகாரமே இல்லாத ஜென்ம காதல் தோஷம் கடுமையாய் இருக்கிறதாம், நான் உன்னைக் காதலித்துக் கொண்டேதான் இருப்பேனாம்
என் பிறந்த நேரத்தை வைத்து என் ஜாதகமும் நீ பிறந்த நேரத்தை வைத்து என் காதல் ஜாதகமும் கணிக்கப்பட்டிருக்கிறது
மற்றவர்களுக்கு நட்சத்திரப் பலன் சொல்லும் ஜோசியக்காரன் எனக்கு மட்டும் நிலவுப் (உன்) பலன் சொல்கிறான்,
உன் ஜாதகத்தின் காதல் பக்கங்கள் மட்டும் ஏனோ இன்னும் வெறுமையாய் இருக்கிறது. எப்போது உடையும் உன் மௌனங்கள்? எப்போது நிறம் மாறும் உன் வெண் பக்கங்கள்?
August 30, 2011
உன் வெட்கங்களை மொழி பெயர்ப்பதில் உன் கொலுசுகளுக்கும், உன் வளையல்களுக்கும் ஒரு பெரும்போட்டி இருக்கத்தான் செய்கிறது
August 29, 2011
உன் வீட்டுக் கிணற்றிக்கு மட்டும் மாதத்தில் எப்படி முப்பது பௌர்ணமிகள்? தினமும் உன் முகத்தையே பார்க்கும் அதற்க்கு எப்படித் தெரியும் வானில் இன்னொன்று இருப்பதென்று?