September 24, 2019

நீ இல்லாத நான்
நான் இல்லாத நீ
பிறகு ?
நீயும், நானும் இல்லாத “நாம்”
உதட்டுச்சாயத்தில்
நிறம் தேடுகிறாய் நீ
சுவை தேடுகிறேன் நான் !!
இல்லை என்பதில்
நிறைய ஆமாம்-கள்
மறைந்திருக்கின்றன

September 16, 2018

உன் முத்தங்களை
என் முத்தங்களோடு
கொண்டாடிக் களிப்போம்
# முத்தங்களின் காதலி

September 05, 2018

அருகில் வா,
இது இதழ்கள் இணையும்
மௌன மொழி.
# முத்தம் எனும் குறுங்கவிதை
பிழையும், பிழைத்திருத்தமும்
பிழையில்லாமல் செய்யப்படும்.
# முத்தம் எனும் குறுங்கவிதை.
உன் முத்தங்களைத்
திருடும் வேளைகளில்,
என் முத்தங்கள்
தொலைந்து போகின்றன.
# முத்தம் எனும் குறுங்கவிதை