July 25, 2010

உன்னைக் காதலிக்க ஆரம்பிக்கும் முன்
எல்லாப் பெண்களிலும் அழகு தெரிந்தது,
உன்னைக் காதலிக்க ஆரம்பித்த பின்
எல்லாப் பெண்களிலும் நீயே தெரிகிறாய்
காதல் ஒரு அழகு
- காதலில் ஜெயித்தவனின் வரி
காதல் ஒரு வலி
- காதலில் தோற்றவனின் வரி
காதல் ஒரு அழகான வலி
- உன்னைப் பற்றி நினைக்க ஆரம்பித்திருக்கும் என்னுடைய வரி 
ஒரு நாளைக்கு
1440 தித்திப்பு நிமிடங்கள் இருப்பது
உன்னை நினைக்க
ஆரம்பித்த பிறகுதான் தெரிகிறது
எங்கே கற்றுக்கொண்டாய்
உன் நினைவுகளை மட்டுமே கொண்டு
என்னைக் கொல்வதற்கு?
புல்வெளியைக் குளிப்பாட்டும்
காலைப் பனித்துளி போல்,
என்னை ரம்மியமாக்குகின்றன
உன் அழகு நினைவுகள்
என்னுடைய அத்தனை
உள்நாட்டு போர்களையும்
உன்னுடைய ஒரு சிறிய புன்னகை
துகள் துகளாக்கி விடுகிறது
உன்னைப்பற்றி யோசிக்கும்போது
வரும் இவ்வளவு வார்த்தைகளும்
உன்னை நேரில் பார்க்கும்போது
ஏனோ மௌனங்களாக மாறிப்போகின்றன
உன்னை நினைக்க ஆரம்பித்த உடனே
எங்கோ இருந்து வரும் சந்தோசம்
என் முகத்திலும்
மனதிலும் ஒட்டிக்கொள்கிறது
காதல் அழகு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்,
உன்னை நினைக்க
ஆரம்பித்த பிறகுதான் தெரிகிறது
அது பேரழகு என்று

July 24, 2010

நீ உன் கண்களுக்கு வெளியே
கருப்பு மை தீட்டிகொண்டாய்,
நானோ என் கண்களுக்கு உள்
உன்னை வண்ணமாய்த் தீட்டிக்கொண்டேன்
காதலுக்கென தனி மொழி இருக்கையில்
உனக்கும் எனக்கும் எதற்கு தனி மொழி?
நீ பிரம்மன் எழுதிய கடைசிக் கவிதை
இது நான் எழுதும் முதல் கவிதை
என் அறிமுகம் இல்லாத உனக்கு
என்னை
அறிமுகம் செய்ய முனைகின்றன என் வரிகள்
நானும் என் வரிகளும்
காத்திருக்கிறோம்
உன் ஒற்றை ஒப்புதல் வேண்டி
வேதியியலில் வினையூக்கி போலே
நீ அணியும் ஆடைகள் எல்லாமே
உன் அழகூட்டிகள்
உன் கருப்பு உடையும்
வெள்ளை மல்லிகையும் இணைந்து
எனக்குள் புரிகின்றன வர்ணமாயங்கள் 
ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட
என் கடிதத்திற்கு,
உன் ஒற்றைப் பதில் - இந்த அழகுப் பார்வை
ஒரு மெல்லிய மயில் தோகையின் வருடலை
உன் மெல்லிய துப்பட்டாவின் வருடலில் உணர்கிறேன்

July 22, 2010

உன்னுடைய
ஒவ்வொரு புதிய புகைப்படத்திலும்,
பழைய புகைப்படத்தை விட
பல மடங்கு அழகாய்த் தெரிகிறாய்