August 22, 2010

நீ புது ஆடை அணியும்போதேல்லாம்
ஒரு புது அவதாரம் எடுக்கிறாய்,
உன்னுடைய அடுத்த அவதாரம் எப்போது?

August 19, 2010

நான் குழப்பத்தில் இருக்கிறேன்
நீ அழகாய் இருக்கிறாயா?
இல்லை
என் காதல் உன்னை அழகாய்க் காட்டுகிறதா?

August 18, 2010

உன்னை ஒவ்வொருமுறை சந்திப்பதும்
நீ தெருமுனையில்
தலை திருப்பி விடைபெறும்
அழகைக் காணவே ..

August 14, 2010

உன் காலடித்தடம்
வரைந்த கோலங்களை
திருடப்பார்க்கிறது,
இந்த பொல்லாத சமுத்திரம்

August 03, 2010

என்னை உனக்காகத் தோற்றுவித்த
இந்தக் காதலுக்கு
நான் செய்யும் கைமாறு
உன்னைக் காதலிப்பதுதான்
நான்தான் ஆகாயம்
என் வருடத்தின் 365 நாள்
முழுமதி நீ
உன்னுடைய அடுத்த
காரணப் பெயர் - சிவப்பு நிற வெட்கம்
உன்னைப் பார்க்கும் போது
நான் கவிஞன் ஆனேன் என்று ஊர் சொன்னாலும்,
உன்னைப் பார்க்கும் போது
நீ என்னைக் கவிஞன் ஆக்குகிறாய் என்பதே உண்மை

August 02, 2010

நம் பார்வைகள் மோதிக்கொள்ளும்
அந்த ஒரு வினாடியில்
என் உடம்பின்
ஒட்டு மொத்த செல்களும் அடங்கிப் போகின்றன
உன் முகத்தில் தெரியும்
அந்த சிறு அமைதியில்
என் அத்தனைப் போர்க்களங்களிலும்
பூக்கள் பூத்துப் போகின்றன
நீ வைத்திருக்கும்
மல்லிகைப் பூக்களின்
வாசத்திற்கும் சேர்த்து
நான் மயங்கிப் போகிறேன்

August 01, 2010

வெட்கத்தின் உண்மையான அழகு
நீ வெட்கப்படும்போதுதான் ஒளிரும்
நான் தேடும் அமைதி உன்னில்
நீ தேடும் காதல் என்னில்
நாளைக்காவது உன்னைக் காண்பேனா?
நீ இல்லாத நெருப்பு நிமிடங்கள்
என்னைத் தின்றது போதும்
உன் நினைவுகளில்
நானும், என் இரவு வினாடிகளும்
தொலைந்து போகின்றோம்
உலகின் மிக அழகான பூ எது?
என்னுடைய இன்றைய பதில்:
(நீ சூடியிருக்கும்) மல்லிகை