October 27, 2010

நட்சத்திரங்கள் ஆயிரம் இருந்தாலும்,
வானமாகிய நான்
என் பெண் நிலவுக்குத்தான் அடிமை

October 26, 2010

அடுத்த பௌர்ணமிக்காக ஏங்கும்
நட்சத்திர வானம் போல,
அடுத்த உன்னுடைய சந்திப்புக்காக
ஏங்கும் நான் - உன் காதலன்

October 24, 2010

உனக்குத் தெரியாமல் போன
உன்னுடைய இன்னொரு
இணைத் தண்டவாளம் நான்,
நீ எங்கு போனாலும்
இணையாகவும் அருகிலும் நானே

October 07, 2010

உன்னைப்பற்றியோ அல்லது
என்னைப்பற்றியோ பேசினால்
பதில் பேசும் நீ,
நம்மைபற்றிப் பேசினால் மட்டும்
ஏனோ மௌனமாகி விடுகிறாய்

October 06, 2010

உன்னுடைய மௌனமும்
நமக்குள் இருக்கும் இந்த நீண்ட தொலைவும்தான்,
எனக்கும் நம் காதலுக்கும்
இருக்கும் இடைவெளி.
தொலைவும் மௌனமும் தொலைவது எப்போது?

October 05, 2010

நான் சரிசெய்வதர்க்க்காகவே
நீ கோணலாய் பொட்டு வைக்கிறாய்,
நான் சரிசெய்கிறேன் என்கிற சாக்கில்
மறுபுறம் கோணலாக்கிவிடுகிறேன்
மீண்டும் சரிசெய்ய நான்தானே வர வேண்டும் !!

October 04, 2010

எவ்வளவுதான் போரிட்டாலும்
உன் மெளனத்திடம்
என் சொற்கள் தோற்றுத்தான்போகின்றன