July 01, 2013

விடிந்து போன இன்னுமொரு தேனிலவு நாள்

மீண்டும் மலரட்டும் உன் வெட்கங்கள்
எடுக்கவும், தொடுக்கவும் நானே
- விடிந்து போன இன்னுமொரு தேனிலவு நாள்

விடிந்து போன இன்னுமொரு தேனிலவு நாள்

உதிர்ந்த மல்லிகைகள்
மலர்ந்த நீ
காதலாய் நான்.
- விடிந்து போன இன்னுமொரு தேனிலவு நாள்

June 10, 2013

ஒரு பல்லவி, பல சரணங்கள்
ஒரு சரணம், பல பல்லவிகள்
இரவெங்கும், சங்கீத மழை
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
முழ மல்லிகை, முன்னுரை
உதிரி மல்லிகை, முடிவுரை
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
பாதைகள் மறைந்து போகட்டும்
நேரங்கள் மரித்துப் போகட்டும்
நாமும் தொலைந்து போவோம்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
இதழ் ரேகைகள் இனிக்கட்டும்
விரல் ரேகைகள் துவர்க்கட்டும்
மேலும் சுவை கூடட்டும், இந்த வினாடிக்கு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
வெட்கங்களை தொலையெனடி
நான் உன்னில் தொலைந்து போவேன்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
உன் வாசனையில், என் நிமிடங்கள்
என் வாசனையில், உன் நிமிடங்கள்
நம் வாசனையில், இந்த இரவு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
ஒரு மௌனம் சம்மதமாய்
மறு மௌனம் எதிர்ப்பாய்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
பத்து விரல் தூரிகையில்
உன் வெட்கம் எனும் ஒற்றை ஓவியம்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
இரவு கரையட்டும், அழகு வளரட்டும்
அழகு கரையட்டும், இரவு வளரட்டும்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
அழகாகும் என் களவுகள்
களவாகும் உன் அழகுகள்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
மொழி மறந்த இலக்கணங்கள்
இலக்கணம் மறந்த மொழிகள்
முத்தங்கள் எழுத்துக்களாய்.
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
என் தீண்டலில், உன் ராகங்கள்
என் ராகங்களில், உன் தீண்டல்கள்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
உன் இதழ்களின் மௌனங்களும்
என் இதழ்களின் மௌனங்களும்
இப்போது கவிதைகளாய்.
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

May 16, 2013

உன் புடவைப் பூக்களிலும்
தேன் தேடச் சொல்கிறது என் இரவு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
எந்த இதழில் இந்தத் தித்திப்பு?
இன்னொரு முறை இனித்துக் கொள்ளவா !!
இன்னுமொரு மேகம், இன்னுமொரு மழைத்துளி

April 16, 2013

என் அங்கம் எங்கும், உன் இதழ்களின் நகல்கள்
உன் அங்கம் எங்கும், என் விரல் நகங்களின் நகல்கள்
- இது இன்னுமொரு தேனிலவு நாள்
முன்னிரவு: நீ நண்பன், உன் வெட்கம் எதிரி
பின்னிரவு: நீ எதிரி, உன் வெட்கம் நண்பன்
- இது இன்னுமொரு தேனிலவு நாள்
நீ சிவந்து போகிறாய்
இரவு நிறமிழந்து போகிறது
- இது இன்னுமொரு தேனிலவு நாள்
நாமும் இதழ்களும் ஒட்டிக்கொள்வோம்,
கிழக்கும் விடியலும் வெட்டிக்கொள்ளட்டும்.
- இது இன்னுமொரு தேனிலவு நாள்
முத்தங்களில் ஏனடி இடைவெளி?
இடைவெளிகளில் முத்தங்கள் பிறக்கட்டும்
- இது இன்னுமொரு தேனிலவு நாள்
உன் இதழ் ரேகையில்
என் இரவின் ஆயுள்.
- இது இன்னுமொரு தேனிலவு நாள்
மன்னவன் நீ கலைஞன்
மங்கை நான் வீணை
உன் தீண்டல்களில் என் ராகங்கள்
என் மௌன முத்தங்களில் நீயும்
உன் மௌனத் தீண்டல்களில் நானும்
கரைந்து போகின்றோம்...
இப்படியே நீளாதா இந்த இரவு?

April 02, 2013

நானும் என் இதழ்களும்
தவங்கள் இருக்கிறோம்
உனக்காக....

March 25, 2013

ஒரு பாதிப் புள்ளிகள் நான்
மறு பாதிப் புள்ளிகள் நீ
காதல் கோலத்தில் நாம்
- நீ, நான், காதலெனும் வைபோகம்
எந்த இரவு, இந்தப் பகலானது?
எந்தப் பகல், இந்த இரவானது?
- நீ, நான், காதலெனும் வைபோகம்
மெதுமெதுவாய் காதல், ஒரு பகுதியில்
மெதுமெதுவாய் களவு. மறு பகுதியில்
- நீ, நான், காதலெனும் வைபோகம்
காதல் தந்த பரிசு நீ,
நீ தந்த பரிசு உன் வெட்கம்
- நீ, நான், காதலெனும் வைபோகம்
நீ, உன் வெட்கம்
யாரை முதலில் காதலிப்பது?
- நீ, நான், காதலெனும் வைபோகம்
காதலுக்கு நீயும்,
காதலிக்க நானும்
புத்தம் புதியவர்கள்
- நீ, நான், காதலெனும் வைபோகம்

March 06, 2013

புடவையை அடகு வை, உன்னை மீட்டுக்கொள்
உன்னை அடகு வை, புடவையை மீட்டுக்கொள்

January 19, 2013

நாவில் இனிப்பில்லை
உன் பெயரைச் சொல்லிக் கொள்கிறேன்,
இதழ்களில் இனிப்பில்லை
என்ன செய்வதடி !!!

January 17, 2013

கடந்த நொடியை விட
இன்னும் இனிக்கிறது இந்த நொடி,
இன்னொரு முறை சொல்லேனடி என் பெயரை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
என் இரவெங்கும் இனிப்பின் வாசனை,
உளறிக் கொண்டிருக்கிறேன் உன் பெயரை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
காதல் எனும் தவங்கள், நீ எனும் வரம்
நீ எனும் தவம், காதல் எனும் வரங்கள்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
முன் இரவு: நீ ஓவியம், உன் புடவை வர்ணம்
பின் இரவு: நீ ஓவியம், நான் வர்ணம்
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்
உன் புடவைத் தலைப்பு எனும்
பல்லவி மட்டும் கொடு,
சரணங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்

January 15, 2013

வரைந்த ஒரு சித்திரம் நீ,
நெய்த ஒரு சித்திரம் உன் புடவை
இரு சித்திரங்கள், ஒரு ஓவியன்
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்

January 14, 2013

நீயா? உன் புடவையா?
யார் வாசம் முதலில்?
யார் வசம் முதலில்?
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்

January 06, 2013

நீ வெட்கம் மட்டும் படு,
உனக்கும் சேர்த்து நான் சிவந்து கொள்கிறேன்
உனக்கு வெட்கப்படத் தெரியும்,
எனக்கு வெட்கப்பட வைக்கத் தெரியும்..
பாவம் வெட்கம், நமக்கிடையே பரிதாபமாய்