என் நீயும், உன் நானும் ...
January 19, 2013
நாவில் இனிப்பில்லை
உன் பெயரைச் சொல்லிக் கொள்கிறேன்,
இதழ்களில் இனிப்பில்லை
என்ன செய்வதடி !!!
January 17, 2013
கடந்த நொடியை விட
இன்னும் இனிக்கிறது இந்த நொடி,
இன்னொரு முறை சொல்லேனடி என் பெயரை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
என் இரவெங்கும் இனிப்பின் வாசனை,
உளறிக் கொண்டிருக்கிறேன் உன் பெயரை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
காதல் எனும் தவங்கள், நீ எனும் வரம்
நீ எனும் தவம், காதல் எனும் வரங்கள்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
முன் இரவு: நீ ஓவியம், உன் புடவை வர்ணம்
பின் இரவு: நீ ஓவியம், நான் வர்ணம்
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்
உன் புடவைத் தலைப்பு எனும்
பல்லவி மட்டும் கொடு,
சரணங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்
January 15, 2013
வரைந்த ஒரு சித்திரம் நீ,
நெய்த ஒரு சித்திரம் உன் புடவை
இரு சித்திரங்கள், ஒரு ஓவியன்
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்
January 14, 2013
நீயா? உன் புடவையா?
யார் வாசம் முதலில்?
யார் வசம் முதலில்?
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்
January 06, 2013
நீ வெட்கம் மட்டும் படு,
உனக்கும் சேர்த்து நான் சிவந்து கொள்கிறேன்
உனக்கு வெட்கப்படத் தெரியும்,
எனக்கு வெட்கப்பட வைக்கத் தெரியும்..
பாவம் வெட்கம், நமக்கிடையே பரிதாபமாய்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)