என் நீயும், உன் நானும் ...
September 02, 2016
உடைக்கு பதில், நான்
வெட்கத்திற்குப் பதில், முத்தங்கள்.
உடுத்திக்கொள்ள
இன்னும் ஏனடி தயக்கம்?
# இன்னுமொரு தேன்நிலவு நாள்.
August 08, 2016
அழகுகள் களவாடப்படும்
அழகான களவுகள்.
களவுகள் அழகாக்கப்படும்
களவான அழகுகள்.
# இன்னுமொரு தேன் நிலவு நாள்.
வெட்கத்தில் தொடங்கி
காதல் வரை முன்னிரவு.
காதலில் தொடங்கி
வெட்கம் வரை பின்னிரவு.
# இன்னுமொரு தேன் நிலவு நாள்.
வெட்கச் சிப்பியின்
முத்து மகள் நீ.
காதல் சிப்பியின்
முத்து மகன் நான்.
# இன்னுமொரு தேன் நிலவு நாள்.
முத்தங்களைத் திருடிக் கொள்,
இதழ்களை என்னிடமே விட்டுவிடு.
என்னைத் திருடிக் கொள்,
உன்னை என்னிடமே விட்டுவிடு.
# இன்னுமொரு தேன் நிலவு நாள்.
July 26, 2016
முதல் முத்தச் சண்டைகளில்
இரண்டாம் முத்தங்களுக்கு என்ன வேலை?
# இன்னுமொரு தேன் நிலவு நாள்
July 25, 2016
நம் இதழ் ரேகைகள்
தீர்மானிக்கட்டும்
இந்த இரவின் ஆயுளை.
# இன்னுமொரு தேன் நிலவு நாள்
July 24, 2016
முன்னிரவில்
வெட்கம் - உன் கூர் வாள்.
பின்னிரவில்
வெட்கம் - உன் கேடயம்.
# இன்னுமொரு தேன் நிலவு நாள்.
என்னெங்கும் உன் வாசம்,
இரவெங்கும் நம் வாசம்.
# இன்னுமொரு தேன் நிலவு நாள்.
July 13, 2016
உனக்கு எதற்க்கடி
நகச் சாயமும், உதட்டுச் சாயமும்?
வானவில் பெற்ற ஒரே இளவரசி நீதானடி.
# ஆகையால் நான் உன்னைக் காதலிக்கிறேன்.
July 11, 2016
காதலால் சபிக்கப்பட்டேன்
நீ விமோச்சனம்,
உன்னால் சபிக்கப்பட்டேன்
காதல் விமோச்சனம்.
# ஆகையால் நான் உன்னைக் காதலிக்கின்றேன்.
July 07, 2016
மிகச் சாதாரணமாய்
இதழ் சுழித்துப் போகிறாய்,
அசாதாரண பூகம்பங்கள்
என் இருதயத்தினுள்.
# ஆகையால், நான் உன்னைக் காதலிக்கின்றேன்.
July 05, 2016
ஒரு முத்தம் கவிதை
மறு முத்தம் ஓவியம்.
கவிதைக்கு ஓவியங்கள் பரிசு,
ஓவியத்திற்கு கவிதைகள் பரிசு.
# இன்னுமொரு தேன் நிலவு நாள்.
July 04, 2016
முத்தங்களில் வெட்கங்களும்
வெட்கங்களில் முத்தங்களும்
கரைந்தே போகட்டும்.
#இன்னுமொரு தேன்நிலவு நாள்.
July 03, 2016
நமக்குள் இடைவெளிகள்
இருந்து போகட்டும்,
நம் முத்தங்களுக்குள்
எதற்கடி இடைவெளி?
June 27, 2016
முன்னிரவில் வெட்கத்தையும்
பின்னிரவில் எனையம்,
உடுத்திக் கொள்ளும் உனக்கு
தனியே ஆடைகள் எதற்கு?
June 22, 2016
நீ, நான், நம் முத்தங்கள்
இவை போதும் இப்போதைக்கு.
மீதங்களை இனிவரும்
பிறவிகளில் ரசித்துக் கொள்ளளாம்.
June 20, 2016
முத்தங்கள் திருட வந்தவனுக்கு
வெட்கங்களும் இலாபமே.
# நான் ஒரு காதல் களவாணி.
ஓவியன் சிவக்க
ஓவியம் சிவக்க
தூரிகையும் சிவக்கிறது.
#உன் இதழ்கள், என் முத்தங்கள்.
இது
இரண்டாவது முதல் முத்தமா?
இல்லை
முதல் இரண்டாவது முத்தமா?
# உன் இதழ்கள், என் முத்தங்கள்.
March 24, 2016
வெட்கங்கள் படைக்கப்படுகின்றன
வெட்கங்கள் காக்கப்படுகின்றன
வெட்கங்கள் அழிக்கப்படுகின்றன
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
சிவக்கும் ஓவியன்,
சிவந்த ஓவியம்,
வானவில் நிமிடங்கள்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
March 01, 2016
வெட்கங்களைச் சிந்த நேரமில்லை
தனிமைகளைத் தொலைக்கவும் நேரமில்லை
ஆனாலும், நாம் களவாடப்படுகிறோம்
- இவன் களவாணிகளின் களவாணி
உன் முத்தங்களை, என்னிடமும்
என் முத்தங்களை, உன்னிடமும்
களவாடும் களவாணி இவன்.
- இவன் களவாணிகளின் களவாணி
January 28, 2016
கவிதையில் துவங்கி
ஓவியத்தில் முடிக்கிறேன் நான்,
ஓவியத்தில் துவங்கி
கவிதையாய் முடிகிறாய் நீ.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
சிதறிய வெட்கங்களில்
மொத்தமாய் நீ,
மொத்த முத்தங்களில்
சிதறலாய் நான்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
January 27, 2016
தீண்டப்பட்ட வெட்கங்களில் தொடங்கி,
வெட்கப்பட்ட தீண்டல்களில் முடிகிறது
இந்தப் பேரழகு அத்தியாயம்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
நான் வினாக்களைத் தேடுகிறேன்
நீ விடைகளைத் தேடுகிறாய்.
இறுதியாய் தொலைந்து போவதென்னவோ நாம்தான்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
விழிகளின் வினாக்களுக்கு
விரல்களின் பதில்கள்,
விரல்களின் வினாக்களுக்கு
விழிகளின் பதில்கள்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
வெட்கமே வர்ணம்,
வெட்கமே தூரிகை,
வெட்கமே ஓவியமும்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
வெட்கிச் சிவக்க நீ,
வெட்கம் சிவக்க நான்,
பொழுதுகள் சிவக்க நாம்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
January 11, 2016
தொலைந்து போக - நீ,
கண்டுபிடிக்க - நான்,
நாம் தோற்றுப் போக - இவன்
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
என் முத்தத்தில் தொடங்கி,
உன் முத்தத்தில் முடியட்டும்
இவனின் முத்த அத்தியாயங்கள்
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
சிதறிய முத்தங்களைக் கோர்ப்பவன் நான்,
என்னைச் சிதறடிப்பவன் இவன்
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
கள்வனுக்குத் தெரியாமல்
களவாடும் கள்வன் நான்,
கள்வனையும் களவையும்
களவாடும் கள்வன் இவன்
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
உன் பாதி - நான்,
என் பாதி - நீ,
நம் பாதி - இவன்
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
நம்மில் நம்மை
நாம் தேடுவோம்,
என்னில் உன்னையும், உன்னில் என்னையும்
இவன் தேடட்டும்
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
January 10, 2016
முத்தங்களின் போர் முடிந்து,
இப்போது முத்தங்களுக்கான போர்.
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
கிழக்கு விடியலைத் தேடும் முன்,
நம் தேடல் முடியட்டும்.
- இன்னுமொரு தேனிலவு நாள்
உன் வெட்கங்கள் தேயட்டும்
நம் வெட்கங்கள் வளரட்டும்
தினமும் இங்கே முழுமதி தான்,
- இன்னுமொரு தேனிலவு நாள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)