என் நீயும், உன் நானும் ...
November 09, 2010
தேசங்களின் எல்லைக்கோடுகள் எல்லாம்
தேசங்களைப் பிரிக்கவே,
உன்னையும் என்னையும் பிரிக்க அல்ல.
November 08, 2010
ஏழு நிறங்களிலும் வெட்கப்படும்
ஓவியம் நீ,
வரையும் தூரிகை நான்........
October 27, 2010
நட்சத்திரங்கள் ஆயிரம் இருந்தாலும்,
வானமாகிய நான்
என் பெண் நிலவுக்குத்தான் அடிமை
October 26, 2010
அடுத்த பௌர்ணமிக்காக ஏங்கும்
நட்சத்திர வானம் போல,
அடுத்த உன்னுடைய சந்திப்புக்காக
ஏங்கும் நான் - உன் காதலன்
October 24, 2010
உனக்குத் தெரியாமல் போன
உன்னுடைய இன்னொரு
இணைத் தண்டவாளம் நான்,
நீ எங்கு போனாலும்
இணையாகவும் அருகிலும் நானே
October 07, 2010
உன்னைப்பற்றியோ அல்லது
என்னைப்பற்றியோ பேசினால்
பதில் பேசும் நீ,
நம்மைபற்றிப் பேசினால் மட்டும்
ஏனோ மௌனமாகி விடுகிறாய்
October 06, 2010
உன்னுடைய மௌனமும்
நமக்குள் இருக்கும் இந்த நீண்ட தொலைவும்தான்,
எனக்கும் நம் காதலுக்கும்
இருக்கும் இடைவெளி.
தொலைவும் மௌனமும் தொலைவது எப்போது?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)