May 04, 2011

தனித் தனியாய் இருந்த நாம் கூட
ஒன்றாய் இணைந்து போனோம்,
ஏன் இன்னும் புகைவண்டித் தண்டவாளங்கள்
பிரிந்தே இருக்கின்றன?

May 03, 2011

நம் பேரை எழுதிப் பார்த்தால்தான்
நான் வடிவமைக்கும்
திருமண அழைப்பிதழ்கள்
முழுப்பொலிவு பெறுகின்றன
முதல் முத்தம் -
எப்போதுமே நினைவில் இருக்குமாம்,
நம்முடைய எந்த முதல் முத்தம்
உனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது?

April 28, 2011

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில்
முதற்பரிசு வாங்கிய எனக்கு,
உனக்காக எழுதும் மடலுக்கு
ஏனோ வார்த்தைகள் தட்டுப்பாடு
தங்கத்தை உருக்கி
மாங்கல்யங்கள் செய்யும் நான்,
நம் மாங்கல்யத்திர்க்காக
உன்னிடம் இன்னமும்
உருகிக்கொண்டுதான் இருக்கின்றேன்

April 25, 2011

முன்பெல்லாம் நீ பேசும் வார்த்தைகள்
பாடலாய் என் செவிகளில் இசைந்து போகும்,
இப்போதெல்லாம் உன் வார்த்தைகள்
மணமேடை மந்திரங்களாய்த்தான் ஒலிக்கின்றன

April 20, 2011

எனக்குப் பெரிதாய் பரிச்சயமில்லாத உன்னை
என் உடம்பின் ஒவ்வொரு செல்லுக்கும்
பரிச்சயமாக்கி இருக்கிறது இந்தக் காதல்