உன் சிவப்பு உதட்டுச்சாயம் என் கன்னங்களில் ஒட்டிக்கொண்டாலும் வெட்கத்தில் சிவந்து போவதென்னவோ நீதான்
பிள்ளையார் சுழியில் ஆரம்பிக்கும் மடல்கள் போலே, உன் உதட்டுச் சுழியில் ஆரம்பிக்கின்றன என் காவியங்கள்
June 09, 2011
பாற்க்கடலைக் கடைந்து கிடைக்கும் அமுதம் யாருக்கு வேண்டும்? நம் தோழியின் திருமண பந்தியில் நீ கைகளை உதறியபோது என் மீது தூறலாய் விழுந்த அந்த இரு நீர்த்துளிகள் மட்டும் போதும்
நாம் சந்தித்த நாளில் திருமணமான நம் வகுப்புத்தோழி கூட இடுப்பில் ஒன்றும், வயிற்றில் ஒன்றுமாய் ஒய்யாரமாய் வலம் வருகிறாள், உனக்கு மட்டும் ஏன் மனதில் ஒன்றும் தோன்ற மறுக்கிறது?
June 02, 2011
உணவு விருந்துகள் இனிப்பிலிருந்து ஆரம்பிப்பது போல, என் காலைப் பொழுதுகள் உன்னிலிருந்து ஆரம்பிக்கின்றன
இதோடு நாற்பத்து மூன்று முறை உன்னை மறந்தாகிவிட்டது, என் ஒவ்வொரு முறை சபதத்தையும் துகள்துகளாய் உடைத்துப்போகிறது உன் தொலைபேசி அழைப்பு
June 01, 2011
எதிர்பார்த்தது வீண் போகவில்லை சாயந்தரம் வீசிய மழையில் நனைந்தாயிற்று. சில மணி நேர சத்தங்களும் சில நிமிட முத்தங்களும் நிச்சயம்