January 08, 2012

நான் தவமிருக்கும் நாட்களில் மட்டும்
உன் பொல்லாத உலகம்
மெதுவாக இருட்டுகிறது, விரைவாக விடிகிறது.
யாரோ சதி செய்கிறார்கள்.

January 05, 2012

தகப்பன் பெயருக்குப் பதிலாய்,
கணவன் பெயரை, நீ சேர்த்துக்கொண்டும் கூட
என் அலைபேசியில் இருக்கும்
உன் செல்லப் பெயரை மாற்ற மனம் வரவில்லையடி எனக்கு.
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்
மெலிதாய் எரிந்த உன் மணமேடைக் குண்டத்தில்
புகையோடு சேர்ந்து கருகிப் போனது என் காதல்.
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்
மனைவிடம் நினைத்த நேரத்தில் கிடைத்தும்
நீ கொடுத்துவிட்டுப் போன முதல் முத்தம்
என் நினைவிலிருந்து இன்னும் மறையவில்லை.
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்

January 04, 2012

கணவன், மாமியார் என புதுச் சொந்தங்களோடு நீ,
எல்லோரையும் இழந்து அனாதையாய் நம் காதல்.
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்
நீ மட்டும் இரு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாய்,
கருத்தரிக்காமலே போய் விட்டது நம் காதல்.
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்
எத்தனை பேருக்குத் தெரியும் என் காவியங்களின்
முன்னுரை பக்கம் நீதானென்று?
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்