வாரம் ஒருமுறை உனக்கு புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்தாலும் என் சட்டைகள் மீது உனக்கு ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது
February 27, 2011
தொலைதூர சாலைப் பயணங்களில் நண்பர்களுடன் சேர்ந்து இருந்தும், நீ அருகில் இல்லாததால் தனித்தே நான் ஒதுங்கிப்போகின்றேன்
February 24, 2011
கிராமத்து மரங்களில் நான் வரைந்து வைத்திருக்கும் நம் இணைந்த பெயர்களைப் படிக்கும் நீ, 'உன் பெயரிலும் என் பெயரிலும் வேறு யாரோ இருக்கிறார்கள் போல' என்று எப்படியடி பேச முடிகிறது?
நீ தரும் காலைத் தேநீருக்கு வழக்கம்போல நான் தரும் முத்தப்பரிசை இன்று காலையில் மறந்து போனேனோ? நீ கொடுத்தனுப்பிய மதிய உணவிற்கு ஏனோ மிளகாய்ப்பொடி வர்ணம் பூசப்பட்டிருக்கிறது
February 23, 2011
கடைக்கண் பார்வை, இதழோர கள்ளச் சிரிப்பு, தெருமுனை தலைதிருப்புப் பார்வை இவையெல்லாம் எனக்காகவே செய்யும் நீ 'சம்மதம்' கேட்டால் மட்டும் கதவடைத்துக் கொள்கிறாய். இது என்னடி நியாயம்?
February 21, 2011
உன்னைப்பற்றிக் கற்பனையாய் நான் வரைந்த கருப்பு வெள்ளை வரிகள் எல்லாம், நீ சொன்ன 'சம்மதத்தில்' வர்ண ஓவியங்களாய் மாறிப்போயின
February 20, 2011
நீ சம்மதம் சொல்லிவிட்டாய் உன் வேலையும் முடிந்துவிட்டது. உனக்கும் சேர்த்து நானே காதலித்துக் கொள்கிறேன்