என் நீயும், உன் நானும் ...
April 28, 2011
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில்
முதற்பரிசு வாங்கிய எனக்கு,
உனக்காக எழுதும் மடலுக்கு
ஏனோ வார்த்தைகள் தட்டுப்பாடு
தங்கத்தை உருக்கி
மாங்கல்யங்கள் செய்யும் நான்,
நம் மாங்கல்யத்திர்க்காக
உன்னிடம் இன்னமும்
உருகிக்கொண்டுதான் இருக்கின்றேன்
April 25, 2011
முன்பெல்லாம் நீ பேசும் வார்த்தைகள்
பாடலாய் என் செவிகளில் இசைந்து போகும்,
இப்போதெல்லாம் உன் வார்த்தைகள்
மணமேடை மந்திரங்களாய்த்தான் ஒலிக்கின்றன
April 20, 2011
எனக்குப் பெரிதாய் பரிச்சயமில்லாத உன்னை
என் உடம்பின் ஒவ்வொரு செல்லுக்கும்
பரிச்சயமாக்கி இருக்கிறது இந்தக் காதல்
என் வீட்டுக் குங்குமச்சிமிழுக்கும்
என் விரல்களுக்கும்
சாப விமோச்சனம் தர
எப்போது வரப்போகிறாய்?
April 19, 2011
நானில்லா இரவுகளில்
உன் தலையணையில்,
என் பெயரை வரைந்து போகின்றன
உன் அழகிய உதடுகள்
April 18, 2011
நீ மட்டும்தான் உறங்கிப்போயிருக்கிறாய்,
எப்போதும் போல
உன் அழகுக்கும்
எனக்கும்
விடியா இரவுதான்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)