என் நீயும், உன் நானும் ...
November 14, 2011
அது எப்படியடி
என் காதலுக்கு ஆசை முளைக்கும் போதெல்லாம்
நம் குழந்தைக்கும் தூக்கம் கலைகிறது?
செல்லாக் காசுகள் வைத்திருக்கும்
ஏழை போல்,
நீ இல்லாமல் என் கடிகாரத்தில்
நிமிடங்கள் இருந்து என்ன பயன்?
உன் கண்களைப் பார்த்துப் பேசும்
தைரியம் வந்துட்டதென மகிழ்ந்தேன்,
தைரியத்தை சுக்குநூறாக்கியது
உன் சிவந்த மென் உதடுகள்
November 10, 2011
உன் காதல் ஒரு அணு உலை
உன் உதடுகள் ஒரு மின்சாரக் கடத்தி,
என்னில் எப்போதுமே மின்சாரத் தட்டுப்பாடு
இன்னொரு முறை உதட்டைச் சுழிக்காதே,
முதல் பூகம்பத்தில் இருந்தே
நான் இன்னும் மீளவில்லை
காய்ந்து போயிருக்கிறது என் கன்னப்பிரதேசம்
எப்போது வரும் உன் முத்தப் பருவமழை?
இறந்துபோன நான் உயிர் பிழைக்கிறேன்
உன் முதல் முத்தத்தில்,
உயிர் பிழைத்த நான் மீண்டும் இறந்து போகிறேன்
உன் மறு முத்தத்தில்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)