December 11, 2010

உன்னுடைய சுயம்வரத்தில்
மற்ற தேசத்து இளவரசர்களை
தோற்கடித்தவன் நான்,
உனக்கு மாலையிட்ட பின்
உன்னிடம் அடிமையாகிப்போனேன்

December 09, 2010

வரலாறு சொல்லும்
பசலை நோய்க்கு
தலைவிகள் மட்டுமல்ல,
நானும் கூட வாய்ப்பட்டவன்தான்
கதை நாயகியின் பெயரும்
உன் பெயரும் ஒன்றாய் இருப்பதால்,
கதையே இல்லாத திரைப்படம் கூட
மிக இனிமையாகத்தான் இருக்கிறது

December 08, 2010

நீ கொடுக்கும் முத்தத்தில்
சத்தத்தை மட்டும் எனக்குக் கொடுத்துவிட்டு
மற்ற எல்லாவற்றையும் திருடிக்கொள்கிறது
இந்த பொல்லாத தொலைபேசி

December 06, 2010

எங்கேயோ எப்படியோ
எதாவது ஒரு திரைப்படப்பாடலின் வரி,
உன்னைப்பற்றியோ
என்னைப்பற்றியோ
இல்லை நம்மைப்பற்றியோ
நினைக்க வைக்கத்தான் செய்கிறது
காகிதத்தில் என் காதலை எழுதும்போது
கிடைக்கும் ஆயிரமாயிரம் வார்த்தைகள்,
உன்னை நேரில் பார்க்கும்போது
எங்கே ஓடிப்போகின்றன?

December 02, 2010

உலகின் தலைசிறந்த ஓவியர் நீ,
உன் தலைசிறந்த ஓவியம் -
கடற்கரையில் உன் கால் பதியங்கள்