December 25, 2010

உன் மௌனம் என்னும் நெருப்பில்
என்னுடைய சொற்கள் அனைத்தையும்
எரித்துப்போய் விட்டாய்.
சொற்கள் மட்டும்தான் தீர்ந்துபோய்விட்டன,
ஆனால் அந்த நெருப்பையும் அணைக்கும்
என் காதல் ஊற்றுக்கள்
இன்னும் வற்றிப்போய்விடவில்லை

December 22, 2010

என் கடிகாரத்தின் ஒவ்வொரு வினாடியும் கூட
நான் தவறவிட்ட
உன் மார்கழி ஈரக் கூந்தலையும்
நீ வரையும் ஓவியக் கோலங்களையும்
நினைவு படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன
நான், நீ, குங்குமம், மஞ்சள்
அனைத்தும் எப்போதோ தயார்,
ஆனால் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட
மணநாள் மட்டும் ஏனோ இன்னும் தூரத்தில்

December 21, 2010

முட்கள் நிறைந்த மூங்கிலாய்
இருந்த நான்,
உன்னால் இப்போது
காற்றை வாங்கி இசையாக்கும்
புல்லாங்குழல் என மாறிப்போயிருக்கிறேன்

December 15, 2010

காட்டுத்தீயைப் போல்
கொழுந்துவிட்டு எரியும் நம் பிரிவில்
அவ்வப்போது அணைக்க வந்து போகும்
மழைத்துளிகள் போல் கரிசனம் தருகின்றன
உன் மின்னஞ்சலின் கொஞ்சலும்
உன் தொலைபேசி முத்தமும்
கடன் அன்பை முறிக்குமாமே?
நமக்கேன் அந்த வம்பு!
என்னிடம் வாங்கிய முத்தங்களை
திருப்பிக் கொடுத்துவிடு.
வட்டியோடு வந்தால் மிக்க சந்தோசமே!!!

December 12, 2010

உன்னைப்பற்றியான இரண்டு வரிகளுக்கு
அறுபது நிமிடங்கள் யோசித்தேன்,
வந்துபோனதேன்னவோ
உன்னுடைய அறுபதனாயிரம் பிம்பங்கள்தான்