November 30, 2010

நான் கன்னத்தில் கை வைத்தேன்
கப்பல் ஒன்றும் கவிழ்ந்து போகவில்லை,
நீ கன்னத்தில் கை வைத்தாய்
நானே கவிழ்ந்து போனேன்

November 28, 2010

நான் எழுதும் வரிகள் எல்லாம்
உன்னைப்பற்றிதான் என்று தெரிந்தும்,
பதில் சொல்லாமல்
பாராட்ட மட்டும் செய்கிறாயே,
இது என்ன நியாயம்?
கல்லூரி - நமது வகுப்பறை
நீ வரும் முன்னே
நான் நடத்திக்கொண்டிருக்கிறேன்
ஒரு போர்க்களம்,
நீ வந்த பின்
எனக்குள் ஆரம்பிக்கிறது
ஒரு போர்க்களம்

November 25, 2010

கல்லூரி மகளிர் விடுதிச்சாலை -
ஆயிரம் மகளிரின் கால்தடங்கள்
மண்ணில் பதிந்தாலும்,
நான் தேடுவது என்னமோ
உன் காலடித்தடம் தான்
கல்லூரித் தமிழ் மன்றம் - கவிதைப் போட்டி
நீ எழுதிய கவிதைக்கு முதற் பரிசா?
நீ கவிதையாய் இருப்பதனால் முதற் பரிசா?

November 24, 2010

கல்லூரி - நாம் நடந்துபோகும் சாலை
நீ வரும்போது உன் மீது அர்ச்சனை செய்ய
ஆயிரமாயிரம் மலர்களோடு மரங்கள்,
உன் மேல் விழும் மலர்களை
சேகரிக்க உன் பின்னே நான்...

November 23, 2010

கல்லூரி பேருந்து நிறுத்தம் -
நான் போகும் பேருந்துகள்
எல்லாமே பாலைவனம்,
நீ செல்லும் பேருந்து மட்டுமே
எனக்கு சோலைவனம்