December 28, 2010

நம் மனசுக்குள் கேட்கும்
கெட்டிமேளச்சத்தம்,
இடையில் இருக்கும்
நாட்களுக்குக் கேட்கவில்லையோ?
இவ்வளவு மெதுவாக நகர்கின்றன
அடைமழை நாளில்
குடையை மறந்து
வந்ததும் கூட நல்லததுதான்.
என்னைச்சேர்க்க குடையுடன் நீ,
நம்மைச்சேர்க்க இடியுடன் மழை.

December 27, 2010

உன் மௌனம்
எனக்குப் பழகிப்போன ஒன்றுதான்,
ஆனால்
என் திருமணத்திற்கு அவசரப்படும்
என் அம்மாவிற்கு
உன் மௌனத்தை எப்படிப் புரியவைப்பது?

December 26, 2010

நீயும் நானும்
எதிரெதிர் துருவங்கள்தான்,
ஆனால் ஏனோ
இன்னும் ஒட்டிக்கொள்ளவில்லை

December 25, 2010

உன் மௌனம் என்னும் நெருப்பில்
என்னுடைய சொற்கள் அனைத்தையும்
எரித்துப்போய் விட்டாய்.
சொற்கள் மட்டும்தான் தீர்ந்துபோய்விட்டன,
ஆனால் அந்த நெருப்பையும் அணைக்கும்
என் காதல் ஊற்றுக்கள்
இன்னும் வற்றிப்போய்விடவில்லை

December 22, 2010

என் கடிகாரத்தின் ஒவ்வொரு வினாடியும் கூட
நான் தவறவிட்ட
உன் மார்கழி ஈரக் கூந்தலையும்
நீ வரையும் ஓவியக் கோலங்களையும்
நினைவு படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன
நான், நீ, குங்குமம், மஞ்சள்
அனைத்தும் எப்போதோ தயார்,
ஆனால் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட
மணநாள் மட்டும் ஏனோ இன்னும் தூரத்தில்