திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதற்பரிசு வாங்கிய எனக்கு, உனக்காக எழுதும் மடலுக்கு ஏனோ வார்த்தைகள் தட்டுப்பாடு
தங்கத்தை உருக்கி மாங்கல்யங்கள் செய்யும் நான், நம் மாங்கல்யத்திர்க்காக உன்னிடம் இன்னமும் உருகிக்கொண்டுதான் இருக்கின்றேன்
April 25, 2011
முன்பெல்லாம் நீ பேசும் வார்த்தைகள் பாடலாய் என் செவிகளில் இசைந்து போகும், இப்போதெல்லாம் உன் வார்த்தைகள் மணமேடை மந்திரங்களாய்த்தான் ஒலிக்கின்றன
April 20, 2011
எனக்குப் பெரிதாய் பரிச்சயமில்லாத உன்னை என் உடம்பின் ஒவ்வொரு செல்லுக்கும் பரிச்சயமாக்கி இருக்கிறது இந்தக் காதல்
என் வீட்டுக் குங்குமச்சிமிழுக்கும் என் விரல்களுக்கும் சாப விமோச்சனம் தர எப்போது வரப்போகிறாய்?
April 19, 2011
நானில்லா இரவுகளில் உன் தலையணையில், என் பெயரை வரைந்து போகின்றன உன் அழகிய உதடுகள்
April 18, 2011
நீ மட்டும்தான் உறங்கிப்போயிருக்கிறாய், எப்போதும் போல உன் அழகுக்கும் எனக்கும் விடியா இரவுதான்
April 09, 2011
பத்து வார்த்தைகள் கொண்ட காதல் கடிதம் உனக்காக எழுத, இதுவரை ஆயிரம் காகிதங்களை கசக்கிப்போட்டு விட்டேன். இந்த பத்தும் ஆயிரமும், உன்னுடைய 'ஒற்றை' சொல்லுக்காகத்தான்
April 04, 2011
புவி ஈர்ப்பு விசைக்கும் காதல் ஈர்ப்பு விசைக்குமான போட்டியில் காதல் ஈர்ப்பு விசைதான் வென்றது, இன்னும் பறக்கிறேன் வானத்தில், உன்னுடைய காதலினால்
உன்னுடைய இந்த புகைப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் நீ புதிதாகவும் இன்னும் அழகாகவும் தெரிகிறாய், உன்னுடைய இன்னொரு புகைப்படத்தை இப்போதைக்கு திருடவேண்டிய அவசியம் இல்லை