நான் கன்னத்தில் கை வைத்தேன் கப்பல் ஒன்றும் கவிழ்ந்து போகவில்லை, நீ கன்னத்தில் கை வைத்தாய் நானே கவிழ்ந்து போனேன்
November 28, 2010
நான் எழுதும் வரிகள் எல்லாம் உன்னைப்பற்றிதான் என்று தெரிந்தும், பதில் சொல்லாமல் பாராட்ட மட்டும் செய்கிறாயே, இது என்ன நியாயம்?
கல்லூரி - நமது வகுப்பறை நீ வரும் முன்னே நான் நடத்திக்கொண்டிருக்கிறேன் ஒரு போர்க்களம், நீ வந்த பின் எனக்குள் ஆரம்பிக்கிறது ஒரு போர்க்களம்
November 25, 2010
கல்லூரி மகளிர் விடுதிச்சாலை - ஆயிரம் மகளிரின் கால்தடங்கள் மண்ணில் பதிந்தாலும், நான் தேடுவது என்னமோ உன் காலடித்தடம் தான்
கல்லூரித் தமிழ் மன்றம் - கவிதைப் போட்டி நீ எழுதிய கவிதைக்கு முதற் பரிசா? நீ கவிதையாய் இருப்பதனால் முதற் பரிசா?
November 24, 2010
கல்லூரி - நாம் நடந்துபோகும் சாலை நீ வரும்போது உன் மீது அர்ச்சனை செய்ய ஆயிரமாயிரம் மலர்களோடு மரங்கள், உன் மேல் விழும் மலர்களை சேகரிக்க உன் பின்னே நான்...
November 23, 2010
கல்லூரி பேருந்து நிறுத்தம் - நான் போகும் பேருந்துகள் எல்லாமே பாலைவனம், நீ செல்லும் பேருந்து மட்டுமே எனக்கு சோலைவனம்
கல்லூரி கணினி ஆய்வகம் - இயந்திரத்தின் மென்மொழியை எளிதில் கையாளும் நான், உன் விழி பேசும் மொழியில் தடுமாறித்தான் போகின்றேன்
November 20, 2010
வர்ணங்களில் வெட்கப்பூ பூக்கும் ஒரு நடமாடும் செடி நீ, உன்னை வருடிப்போக மட்டுமே வரும் தென்றல் நான்
கல்லூரி இயற்பியல் ஆய்வகம் - என்னைக்கடந்து செல்லும் நீ வீசிப்போகிறாய் ஒரு ஒற்றைப்பார்வை, என் உயிரியலில் ஆரம்பிக்கின்றன அழகிய வேதியியல் மாற்றங்கள்
November 19, 2010
உன் வெட்கத்திடம் என் மனமும், உன் மெளனத்திடம் என் கடித வரிகளும் தோற்றுத்தான் போகின்றன
November 18, 2010
திருமண மாலைக்கான பூக்கள் பூத்துவிட்டன இன்னும் ஏனோ நாட்கள் மட்டும் தூரத்தில்
November 16, 2010
என்னிடம் உன் முதல் வார்த்தையும் உன்னிடம் என் முதல் கவிதையும் பரிமாற்றம் ஆன நேரம்தான் நம் முதல் சந்திப்பு
November 14, 2010
நீ தொடுக்கும் மலர்ச்சரத்தில் பூக்களுக்குள் இருக்கும் இடைவெளியில் புரிகிறது, நம் பிரிவின் உன் வலி
November 13, 2010
என் தனிமை நிமிஷங்களும் உன் தனிமை நிமிஷங்களும் நம் பிரிவு நாட்களின் மணித்துளிகளை நீளமாக்குகின்றன
இப்போது நான் உன்னைப் பிரிந்திருப்பதால் நீ மலர்களை சூடுவதே இல்லையாமே? உன் வீட்டு பூச்செடி எனக்கு காற்றுவழிச் செய்தி அனுப்பியிருக்கிறது
November 11, 2010
உனது வலது கை அறியாமல் உன் இடது கையில் ஒளிந்திருக்கும் கைக்குட்டையைப் போல், எனக்குள்ளே ஒளிந்து போகிறாய் யாரும் அறியாமல்
November 09, 2010
தேசங்களின் எல்லைக்கோடுகள் எல்லாம் தேசங்களைப் பிரிக்கவே, உன்னையும் என்னையும் பிரிக்க அல்ல.
November 08, 2010
ஏழு நிறங்களிலும் வெட்கப்படும் ஓவியம் நீ, வரையும் தூரிகை நான்........