நம் மனசுக்குள் கேட்கும் கெட்டிமேளச்சத்தம், இடையில் இருக்கும் நாட்களுக்குக் கேட்கவில்லையோ? இவ்வளவு மெதுவாக நகர்கின்றன
அடைமழை நாளில் குடையை மறந்து வந்ததும் கூட நல்லததுதான். என்னைச்சேர்க்க குடையுடன் நீ, நம்மைச்சேர்க்க இடியுடன் மழை.
December 27, 2010
உன் மௌனம் எனக்குப் பழகிப்போன ஒன்றுதான், ஆனால் என் திருமணத்திற்கு அவசரப்படும் என் அம்மாவிற்கு உன் மௌனத்தை எப்படிப் புரியவைப்பது?
December 26, 2010
நீயும் நானும் எதிரெதிர் துருவங்கள்தான், ஆனால் ஏனோ இன்னும் ஒட்டிக்கொள்ளவில்லை
December 25, 2010
உன் மௌனம் என்னும் நெருப்பில் என்னுடைய சொற்கள் அனைத்தையும் எரித்துப்போய் விட்டாய். சொற்கள் மட்டும்தான் தீர்ந்துபோய்விட்டன, ஆனால் அந்த நெருப்பையும் அணைக்கும் என் காதல் ஊற்றுக்கள் இன்னும் வற்றிப்போய்விடவில்லை
December 22, 2010
என் கடிகாரத்தின் ஒவ்வொரு வினாடியும் கூட நான் தவறவிட்ட உன் மார்கழி ஈரக் கூந்தலையும் நீ வரையும் ஓவியக் கோலங்களையும் நினைவு படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன
நான், நீ, குங்குமம், மஞ்சள் அனைத்தும் எப்போதோ தயார், ஆனால் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட மணநாள் மட்டும் ஏனோ இன்னும் தூரத்தில்
December 21, 2010
முட்கள் நிறைந்த மூங்கிலாய் இருந்த நான், உன்னால் இப்போது காற்றை வாங்கி இசையாக்கும் புல்லாங்குழல் என மாறிப்போயிருக்கிறேன்
December 15, 2010
காட்டுத்தீயைப் போல் கொழுந்துவிட்டு எரியும் நம் பிரிவில் அவ்வப்போது அணைக்க வந்து போகும் மழைத்துளிகள் போல் கரிசனம் தருகின்றன உன் மின்னஞ்சலின் கொஞ்சலும் உன் தொலைபேசி முத்தமும்
கடன் அன்பை முறிக்குமாமே? நமக்கேன் அந்த வம்பு! என்னிடம் வாங்கிய முத்தங்களை திருப்பிக் கொடுத்துவிடு. வட்டியோடு வந்தால் மிக்க சந்தோசமே!!!
December 12, 2010
உன்னைப்பற்றியான இரண்டு வரிகளுக்கு அறுபது நிமிடங்கள் யோசித்தேன், வந்துபோனதேன்னவோ உன்னுடைய அறுபதனாயிரம் பிம்பங்கள்தான்
December 11, 2010
உன்னுடைய சுயம்வரத்தில் மற்ற தேசத்து இளவரசர்களை தோற்கடித்தவன் நான், உனக்கு மாலையிட்ட பின் உன்னிடம் அடிமையாகிப்போனேன்
December 09, 2010
வரலாறு சொல்லும் பசலை நோய்க்கு தலைவிகள் மட்டுமல்ல, நானும் கூட வாய்ப்பட்டவன்தான்
கதை நாயகியின் பெயரும் உன் பெயரும் ஒன்றாய் இருப்பதால், கதையே இல்லாத திரைப்படம் கூட மிக இனிமையாகத்தான் இருக்கிறது
December 08, 2010
நீ கொடுக்கும் முத்தத்தில் சத்தத்தை மட்டும் எனக்குக் கொடுத்துவிட்டு மற்ற எல்லாவற்றையும் திருடிக்கொள்கிறது இந்த பொல்லாத தொலைபேசி
December 06, 2010
எங்கேயோ எப்படியோ எதாவது ஒரு திரைப்படப்பாடலின் வரி, உன்னைப்பற்றியோ என்னைப்பற்றியோ இல்லை நம்மைப்பற்றியோ நினைக்க வைக்கத்தான் செய்கிறது
காகிதத்தில் என் காதலை எழுதும்போது கிடைக்கும் ஆயிரமாயிரம் வார்த்தைகள், உன்னை நேரில் பார்க்கும்போது எங்கே ஓடிப்போகின்றன?
December 02, 2010
உலகின் தலைசிறந்த ஓவியர் நீ, உன் தலைசிறந்த ஓவியம் - கடற்கரையில் உன் கால் பதியங்கள்