December 29, 2008

உன்னைத்தவிர வேற எந்த ஆசையும்
எனக்கு வேண்டாம் என்பதே
என் நீண்ட நாள் ஆசை
நீ என்ற ஆசைக்கு
ஆசைப்பட்டு எனக்கு,
நாம் என்ற சொந்தம்
வரமாய்க் கிடைத்தது
எனக்கு நீ ஆசை,
உனக்கு நான் ஆசை.
நம் காதலுக்கோ நாம்தான் ஆசை
ஆசைப்படாதே
என்று புத்தர் சொன்னார்,
நீ என் ஆசையாய் இருக்கும்போது
நான் எப்படி ஆசைப்படாமல் இருக்க முடியும்?
எல்லாவற்றிக்கும்
நான் ஆசைப்படவில்லை,
எல்லாமே நீயாக ஆசைப்படுகின்றேன்

December 28, 2008

நான் வைக்கும்
எல்லா செல்ல பெயர்களும்
நீ சொல்லும் போடா என்ற
ஒரு வார்த்தையைப்போல் வருவதில்லை
உன் ஒவ்வொரு
செய்கையைப் பார்க்கும்போதும்
உனக்கு ஒரு செல்ல பெயர்
வைக்கத் தோன்றுகிறது,
எங்கே போவது அத்தனை பெயர்களுக்கு?
உனக்கு நான் வைத்த
சரியான செல்ல பெயர் வெட்கம்
அதுதான் உனக்கே உரித்தானதும்
உன்னில் நான் தேடுவதும்
உனக்கு புதிதாய்
ஒரு செல்ல பெயர் வைத்தேன்,
அதே பெயரில் காவியங்கள்
எழுத உலக கவிஞர்களும் தயார்
ஏ அழகே,
உனக்கு என்ன செல்ல பெயர் வைப்பது?
சரியான கேள்விதான்,
அழகுக்கு என்ன செல்ல பெயர் வைக்கமுடியும்?

December 23, 2008

நீ என்னைப்பற்றி யோசிக்கும்
தருணங்களில்
உனக்குத் தெரியாமல்
உன்னை ரசிக்கவேண்டும் என்பது
என் நீண்டநாள் கனவு
நம்மைப்பற்றி யோசிப்பதா?
நம் காதலைப்பற்றி யோசிப்பதா?
எனக்குத் தெரியவில்லை.
இப்போது நீ என்ன யோசிக்கிறாய்?
நீ நம் காதலைப்பற்றி யோசிக்கும்போதுதான்
அது இன்னும் அழகாகிப்போகிறது
நீ நம்மைப்பற்றி
சிந்திக்கும் கணங்கள்தான்
நான் சுவாசிக்கும் நேரங்கள்
நீ எப்படியெல்லாம்
என்னைப்பற்றி சிந்திப்பாய் என்று
நான் உன்னைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்
காத்திருந்த என் தனிமைக்குத் தெரியும்
என்னுடைய காதலின் ஆழம்
நான் காத்திருக்கிறேன் என்று
நீ சீக்கிரம் வந்துவிட வேண்டாம்.
அப்புறம் நான் உனக்காக காத்திருக்கும்
சுகத்தை இழந்து விடுவேன்
என்னை இப்படி காத்திருக்க வைக்கவாவது
நீ என்னை காதலித்தே ஆகவேண்டும்
கொஞ்ச நேரம்தான் காத்திருந்தேன்
என்று பொய் சொல்லத்தான்
இவ்வளவு நேரம் காத்திருக்கிறேன்
நீ இன்னும் வராததால்
நானும் என் நீண்ட நேரமும்
உனக்காக காத்திருக்கிறோம்

December 22, 2008

உலகின் வேறு வேறு திசையில்
இருக்கும் நம்மை இணைக்கும்
நம் காதலின்
இன்னொரு முகம் இந்த மின்னஞ்சல்
என் அவ்வளவு பெரிய காதலை
எப்படி இந்த சின்ன
மின்னஞ்சலுக்குள் அடக்குவது?
இந்த தொலைபேசி
உன் முத்தங்களை சத்தங்களாகவும்
இந்த மின்னஞ்சல்
வெறும் வார்த்தைகளாகவுமே தருகின்றன
நீ அனுப்பிய மின்னஞ்சலுக்கு
நீ எழுதியபோது பட்ட வெட்கங்களை
என்னிடம் சேர்க்க தெரியவில்லையே!
நீ அனுப்பும் காதலை
விட்டு விட்டு
வெறும் வரிகளை மட்டும்
சுமந்து வருகிறது
இந்த பொல்லாத மின்னஞ்சல்

December 18, 2008

உன் தொலைபேசி அழைப்புமணிக்கு
காத்திருப்பதும் கூட
ஒரு சுகமேதான்
என்னைத் திருடிப்போக
நீ ஒண்ணும் வர வேண்டாம்
உன் தொலைப்பேசி
அழைப்புமணி போதும்
நீ அழைக்காத நேரங்களில்
உன் அழைப்புமணியும்
நானும் பேசிக்கொள்வோம்
உனக்கு கால்கட்டு போடக்காத்திருக்கும்
என்னைக் கட்டிவைத்திருப்பது
உன் தொலைபேசி மணி
உன்னோடு கனவில் இருக்கும் என்னை
உன் நினைவுக்குக் கொண்டுவருவது
நீ அழைக்கும்
உன் தொலைபேசி அழைப்புமணி
உன்னுடன் சில நிமிடங்கள் மட்டும்
பேசினால் மட்டும் போதும்
நான் பல யுகங்களைப் பெற்றுவிடுவேன்
எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்
உன் இத்தனை அழகையும்
என் இத்தனை சந்தோசங்களையும்?
ஏ அன்பே,
நீ பேசும் வார்த்தைகளில்தான்
நான் தேடும் அத்தனை சந்தோஷங்களும்
கிடைக்கின்றன
உன் சிரிக்கும் முகம்
பார்த்து வளரும் நிலவு
உன் மௌன முகம்
பார்த்து தேய்கிறதோ?

December 16, 2008

உன் பயணத்தில்
உன்னைதொட்டுத் தழுவும் இளம்காற்றை
என் வீட்டுச் சிறையில்
அடைத்து வைத்திருக்கிறேன்
நீ பயணம் போகையில்
எதிர்த்திசையில் காற்றும்
உன் திசையில் என் நினைவுகளும்
ஓடிக்கொண்டிருக்கும்

December 15, 2008

உனக்கு மூன்று வேலை
பூஜை செய்வதே
நான் முழுவேளையும்
உன்னை நினைக்கத்தான்
ஊர் வாழ உன் பெயரை
அர்ச்சனை செய்யும் அர்ச்சகன் நான்,
ஆனால் வரங்களை மட்டும்
நீ எனக்குக் கொடுத்துவிடு
நான் தவமிருக்கிறேன் என்று
நீ வரம் தந்து விடாதே
வரம் வாங்கிய பின்
நான் தவம் செய்ய மறந்து போகக்கூடும்
நீ தெய்வமாய் இருக்கும்
கோவிலின் அர்ச்சகரும் நானே,
மற்றவருக்காக அர்ச்சனை செய்யும் போதும்
உன் பெயரையே சொல்லிக்கொண்டிருப்பேன்
நான் நீ தெய்வமாய் இருக்கும்
கோவிலுக்கு நேர்ந்து விட்ட உயிர்
உனக்காக மட்டும்தான் நான்

December 10, 2008

உன் புடவைத்தலைப்பில் இருந்துதான்
என்னுடைய எல்லா கவிதைகளும்
ஆரம்பிக்கின்றன
கணவனுக்கு மனைவி
ஓதுவது தலையணை மந்திரம்,
நீயோ எனக்கு
சேலை மந்திரம் ஒதிப்போனாய்
ஏய் அழகு,
உன்னைக்கட்டிக்கொள்ள
எந்த சேலைக்குத்தான் பிடிக்காது சொல்லு!!!
நீ ஏற்றி வைக்கிறாய் என்பதற்க்காக
எண்ணையே இல்லாமல் எரிகின்றன
இந்த பொல்லாத தீபங்கள்
காற்றின் திசையில் எரியாமல்
நீ நடந்து போகும்
திசையை நோக்கி எரிகின்றன
நீ வைத்துப்போன தீபங்கள்
தீப ஒளியில்
இருள் மறைந்து போவதைப்போல்
உன் நினைவுகளில்
என் பாரங்கள் தொலைந்து போகின்றன
நீ வைக்கும்
கார்த்திகை தீபங்களைப் போலவே
நானும்
உன் நினைவுகளை தீபங்களாக
என்னுள் ஏற்றி வைக்கிறேன்
நீ வைக்கும் தீபங்களில்
நானே ஒளியாகிப்போகின்றேன்

December 09, 2008

ஏழு சுவரங்களில்
உருவான இசையை
நீ புது சுவரத்தில்
எனக்கு கற்றுத்தருகிறாய்
பாதை தெரிகிறதோ இல்லையோ
பாதையில் இருக்கும்
உன் கால் சுவடுகள்
நன்றாகவே தெரிகின்றன
நீ பேசும் வார்த்தைகள்
ஏற்கனவே தமிழில் இருக்கின்றனவா
இல்லை
எனக்கு புதிதாய் தோன்றுகின்றனவா?
உன்னுடைய
பல பிம்பங்களை வைத்திருக்கும்
என் கண்களுக்கு
இன்னும் புது பிம்பங்களின்
தேடல் குறையவில்லை
நான் உன்னைப்பார்க்கும் போதெல்லாம்
துடிப்பதை விட்டு விட்டு
உன்னை வேடிக்கை பார்க்க
ஆரம்பித்து விடுகிறது
என் இதயம்

December 08, 2008

எல்லா முத்தங்களையும்
அந்த பொம்மைக்கே கொடுத்துவிடாதே
எனக்கும் கொஞ்சம் மிச்சம்வை
நீ உறக்கத்தில்
என் பெயர் சொல்லி
புலம்புவதைக் கேட்கத்தான்
நான் அந்த பொம்மையை
அனுப்பி வைத்திருக்கிறேன்
நீ இந்த பொம்மையை
வைத்து செய்யும்
வேடிக்கைகளைப் பார்க்கும்போது
எனக்கே
பொம்மையாகிவிடத் தோன்றுகிறது
நான் அனுப்பிய எல்லா செய்திகளையும்,
உன்னிடம் வந்து சேர்ந்த பின்
அந்த பொம்மை மறந்துவிட்டது.
நீ கொஞ்ச ஆரம்பித்த பின்
அந்த பொம்மைக்கு எப்படி ஞாபகம் இருக்கும்?
உனக்கு
விளையாட பொம்மை
வாங்கிக் கொடுத்தது என் தவறு
என்னை விட்டு
நீ அதையே
கொஞ்சிக்கொண்டு இருக்கிறாய்
பத்துத் திசைக்கும் வைத்த
காவலைத் தாண்டி வந்து
என் மனதைத் திருடிப்போன
கொள்ளைக்காரி நீயேதானடி
தெற்குச் சீமையிலிருந்து
வரும் ராஜாக்கள் போல்
நீ எந்த திசையிலிருந்து
வந்த இளவரசி?
நீ வந்ததிற்க்குப் பிறகு
என் வானில் மேற்கேதான்
சூரியன்கள் உதிக்கின்றன
கிழக்கே உதிக்கும் சூரியனைப்போல்
எனக்குள் உதித்த நீ
எனக்குள்ளேயே பரவிப்போனாய்
வடக்கிருந்து உயிர் விடுவது
வரலாற்றில் நடந்த ஒன்று
வடக்கிருந்து உயிர் வாழ்வது
இப்போது நடக்கும் ஒன்று,
என் வடக்கே உன் வீடு

December 05, 2008

நீ அணைத்துத் தூங்கும்
உன் செல்லத் தலையணைக்கு
இன்னும் சிலநாட்களில்
ஓய்வு வரப்போகிறது
எனக்காக உன் கால் கொலுசில்
எத்தனை பாடல்களை
சேர்த்து வைத்திருக்கிறாய்?
ஒரு வருடம் கழித்து
இப்போது நீ எப்படி இருப்பாய்?
பிறக்கும் குழந்தைக்கு
இருக்கும் அம்மாவின் ஆர்வம்
எனக்கும் வந்துவிட்டது
ஆக்கப் பொறுத்தவனுக்கு
ஆறப் பொறுக்காதாம்
இங்கேயும் அதே கதைதான்
முன்னூறு நாள் பொறுத்தவனுக்கு
முப்பது நாள் பொறுக்கமுடியவில்லை
வைத்து விட என் கை இல்லாமல்
போன உன் கூந்தலும்,
வைக்க கூந்தல் இல்லாமல்
போன என் கைக்கும்
நாம் சந்திக்கும் நாளே நன்னாள்
நீண்ட நாளுக்கு பிறகு
உன்னைப் பார்க்கும் எனக்கு
உன் வெட்கத்தைப்
பரிசாகத் தருவாயா?
இனிமேல் நிலவுக்கு
நம்மிடம் தூது போகும்
வேலை இருக்கப்போவதில்லை,
நான் என் நிலவைப்
பார்க்கப்போகின்றேனே
நான் இல்லாமல்
நீ தனியே நடந்துபோன பாதையிடம்
நாம் திரும்ப ஒன்றாக
நடக்கப்போகும் நாள் வந்துவிட்டது
என்று சொல்லிவை
என் கைகளுடன் ஒட்டியிருக்கும்
உன் கைரேகைகள்
இப்போது எப்படி இருக்கின்றன?
என் கைரேகைகள்
நலம் விசாரிக்கின்றன
நான் உன்னிடம் கொடுத்துவைத்த
என் மனது எப்படி இருக்கிறது?
அதனிடம் சொல்லு
நான் சீக்கிரம் வருகிறேன் என்று
நீண்ட நாளுக்கு
பிறகு உன்னைப்பார்க்கும்
என் கண்ணுக்கு
அழாமல் இருக்க சொல்லிக்கொடேன்

December 04, 2008

பூமிக்கு இயற்கை
காலத்தை நிர்ணயிப்பதைப்போல்,
எனக்கு நீ
காலத்தை நிர்ணயிக்கிறாய்
இலையுதிர் காலத்திலும் கூட
என் மரங்கள் பூக்களை
உனக்காகப் பூத்து வைக்கின்றன
நீ எனக்காக
வரும் வசந்த காலம்,
நீ வராமல் போகும் நேரம் எல்லாம்
என்னுடைய கோடை காலம்
நீ என்னில்
பெய்யும் மழைக்காலம்,
உன் காதல்
என்னை நனைத்துப்போகிறது 
நீதான் என் கற்காலம்,
உன்னில்தான் நான்
உருப்பெற்றிருக்கிறேன்

December 02, 2008

பாட்டியையும் நரியையும்
ஏமாற்றி வடையைத்திருடிய
காகம் போலவே
என்னையும் ஊரையும்
ஏமாற்றி என் மனதைத்
திருப்போனவள் நீ
கற்களைப்போட்டு நீரை எடுத்த
காகம் போலவே
என் கடிதங்களைப்போட்டு
உன் காதலை எடுத்திருக்கிறேன்
ஆமையிடம் தோற்றுப்போன
முயலைப்போல்
உன் காதலிடம் நான் தோற்றுப்போனேன்
நீரில் தத்தளித்த எறும்புக்கு
இலை போட்ட பறவையைப்போல்,
தனியே இருந்த எனக்கு
நீ உன் காதலைத் தந்து
என்னைக் கரை ஏற்றிவிட்டாய்
நான் விறகு வெட்டும் விறகுவெட்டி
நீ எனக்கு வரங்கள் தரும் தேவதை
எனக்கு கோடாலிகள் வேண்டாம்
என்னைக் கொய்யும் உன் பார்வைகள் வேண்டும்

November 27, 2008

வானொலியில் சங்கீதம்
வருவதுதானே நியதி?
உன் வீட்டு வானொலியைக் கேட்டால்
நீ பாடுவதைத்தான் சங்கீதம் என்கிறது 

November 25, 2008

புவியைத் தாங்கும்
நிலம் போல்
உன் நினைவுகளை
தாங்குகிறேன் நான்
எங்கும் பரவி
சுவாசத்தில் கலக்கும் காற்றைப்போல்
எங்கும் நிறைந்து
என்னில் கலந்துபோயிருக்கிறது
உன் இனிய நினைவுகள்
ஆகாயம் எங்கும்
நிறைந்து போன நீல நிறமாய்
என்னில் நீ எங்கும் பரவிக்கிடக்கிறாய்
அக்னி சாட்சியாக
நடக்கும் எல்லா நிகழ்வுகளைப் போல்
நம் காதல் சாட்சியாக
நமக்குள் எல்லாமே நடக்கிறது
நான்கு பக்கம்
நீரால் சூழப்பட்டிருக்கும் தீவைப் போல்
எல்லாப் பக்கமும்
உன் நினைவுகளால்
சூழப்பட்டிருக்கிறேன்

November 24, 2008

நீ மௌனமாய் இருக்கிறாய்
என்பது பிடிக்காமல் தான்
வானம் இவ்வளவு சத்தமாய்
இடி இடிக்கிறது
உன்னை புகைப்படம் எடுக்க
வானமும் போட்டிபோடுகிறதோ?
எங்கிருந்து வருகிறது
இவ்வளவு மின்னல்கள்?

November 23, 2008

நீ வைக்கும் மருதாணி
சிவப்பு நிறத்தில் சிவப்பதால்
மற்ற நிறங்களுக்கு சிவப்பு நிறத்தின்மேல்
லேசான கோபம் இருக்கத்தான் செய்கிறது
உன் பச்சை நிற உடையைப் பார்த்தும்
எனக்கு வந்து போனது பச்சை காமாலை,
பார்ப்பதெல்லாம் பச்சையாய்த் தெரிகிறது
உன் சிவப்பு கன்னங்களில்
இருந்து எடுத்த நிறம்தான்
வெட்கம் என்னும் ஓவியத்திருக்கு
வண்ணம் ஆகிறது
உன் கருமை நிற கூந்தலின்
இருளுக்குள் தான்
நாம் தேடும் வெளிச்சங்கள்
இருக்கின்றன
நீ என்ற
ஒற்றை நிறத்திலிருந்து வந்ததுதான்
நான் என்ற வானவில்
கல்லூரி கணினி ஆய்வகம் -
இயந்திரத்தின் மென்மொழியை
எளிதில் கையாளும் நான்,
உன் விழி பேசும் மொழியில்
தடுமாறித்தான் போகின்றேன்

November 19, 2008

பரண் மேல் இருக்கும்
உன் வீட்டு பழைய வானொலியும்
நானும்தான்
உன் பாடலை
முதன் முதலில் காதலித்தவர்கள்
நீ செல்லமாய்
மண்டையில் தட்ட வேண்டும்
என்பதற்காகவே
அடிக்கடி இடையில்
தன் பேச்சை நிறுத்திக்கொள்கிறது
உன் வீட்டு வானொலி
நீ உடன் பாட ஆரம்பித்தவுடன்
வானொலி வெட்கப்பட ஆரம்பிக்கிறது
வானொலியில் சங்கீதம்
வருவதுதானே நியதி?
உன் வீட்டு வானொலியைக் கேட்டால்
நீ பாடுவதைத்தான் சங்கீதம் என்கிறது
இருக்கும்
எல்லா வானொலி நிலையங்களையும்
விட்டு விட்டு
நேற்று நீ பாடிய பாடலை
திரும்பப் பாடிக்கொண்டிருக்கிறது
உன் வீட்டு வானொலி

November 18, 2008

உன்னோடு வரும்
இந்த 30 நிமிட
பேருந்து பயணம்தான்
என் முன் ஆறு ஜென்ம
தவங்களின் வரம்
காதலின் சின்னம்
இதயம் என்று யார் சொன்னது?
உன்னையும் என்னையும்
சேர்த்து வைத்த இந்த பேருந்துதான்
இனிமேல் காதலின் சின்னம்
நீ தோள் சாய்ந்து தூங்கவாவது
இந்த பேருந்து பயணம்
நீண்டு போகாதா?
ஜன்னல் இருக்கையில்
அமர்ந்திருக்கும் நீ
உன் கூந்தலை காற்றில் பறக்கவிட்டு
என்னை பின் தொடர வைக்கிறாய்
பேருந்தும் காற்றும்
ஏதோ திசையில் இருக்க
என் நினைவுகள் மட்டும்
உன்னோடு பயணம் செய்யும் திசையில்

November 17, 2008

உன் ஒரு முக தரிசனத்திற்கு
காத்திருக்கும் என்னைப்பார்த்து
உன் பல முகங்களை
தினம் ரசிக்கும் கண்ணாடி
ஏளனம் செய்கிறது
நேற்று வைத்த பொட்டை
இன்று காலையில்
கண்ணாடியில் ஒட்டவைத்து
நாளை வந்து என்னை திருடிப்போகவைக்கிறாய்
உன் வீட்டு
கண்ணாடி முன் நின்று
உன் அழகை சரிபார்க்கிறாய்,
அதுவோ உன் அழகை
நகலெடுத்து அதுவும் அழகாகிப்போகிறது
எனக்கு வரதட்சணையாய்
உன் வீட்டுக் கண்ணாடிதான் வேண்டும்
நான் முதல் முறை
உன் வீட்டிற்கு வந்தபோது
அதுதான் எனக்கு உன்னைக்காட்டியது
நீ ஒவ்வொருமுறை
கடந்து போகும்போதும்
உன்னை பிம்பகளாக
உன் வீட்டு கண்ணாடி திருடிக்கொள்கிறது

November 13, 2008

நீ வெள்ளிக்கிழமை மட்டும்
சூடும் மல்லிகை பூக்களில்தான்
என்னுடைய
மற்ற வார நாட்கள் பூக்கின்றன
வெள்ளிகிழமைக்காக சனிக்கிழமை
தவம் இருக்கிறதோ இல்லையோ
உனக்காக
ஒவ்வொரு வெள்ளிகிழமையும் தவம் இருக்கிறது
உன் கூந்தல் ஈரத்துளிகளில்
நானும் இந்த வெள்ளிக்கிழமையும்
நனைந்து போகிறோம்
வாரம் முழுதும் பூக்கும் பூக்கள்
இந்த வெள்ளிக்கிழமைக்காகவும்
உனக்காகவும் தான் காத்திருக்கின்றன
இந்த வாரத்திற்க்கு
வெள்ளிக்கிழமை வந்துவிட்டது.
வெள்ளிக்கிழமைக்கோ
உன் தலைக்குளியல் வந்துவிட்டது

November 12, 2008

உன் இரு கரங்களையும்
இந்த உதிர் பூக்களையும் வைத்து
நீ மாலைகள் என்னும்
சிற்பங்களை செதுக்கிக்கொண்டிருக்கிறாய்
ஒரு முழம் பூவை
நீ கட்டி தலையில் சூடும் நேரத்தில்
என்னை நீ
ஓராயிரம் முறை கூட சூடிக்கொள்ளலாம்
நீ கட்ட ஆரம்பித்ததோ பூ மாலை
கட்டிமுடித்ததோ என்னவோ
ஒட்டு மொத்த என்னைத்தான்

November 11, 2008

நீ இதழ்களால் பேசும்
இந்த இரண்டு வார்த்தைகளும்
உன் இமைகள் பேசும்
ஆயிரம் வார்த்தைகளும் ஒன்றேதான்
உன் இந்த
ஓரிரண்டு வார்த்தைகளில்தான்
எனக்கான
உன் ஒட்டு மொத்த காதலும்
ஜீவித்து இருக்கிறது
தன் மழலை மொழியில்
தாயுடன் பேசும் குழந்தை போல
என்னுடன் நீ உன்
வெட்க வார்த்தைகளில் பேசுகிறாய்
என் ஆயிரம் சொற்களின்
தவமே நீ சினுங்கிப்பேசும்
இந்த ஒற்றைச் சொல்தானடி
என் ஒவ்வொரு கவிதைக்கும்
நீ பதிலாய் தருவது
நீ சினுங்கிப் பேசும்
உன் அகராதிச் சொற்களையே

November 10, 2008

நீ இல்லாத ஒரு நாளை
தாங்கமுடியாமல் போகும் என்னால்
இந்த ஜென்மத்திருக்கும்
அடுத்த ஜென்மத்திருக்கும்
வரும் இடைவெளியில் நிச்சயமாய்
உன்னை பிரிந்திருக்க முடியாது
கடந்த வாரம், நான்
ஒரு நிமிடம் தாமதமாய் வந்ததற்கு
நேற்று, நீ
ஊருக்கு போய் தண்டனை கொடுத்துவிட்டாய்
நீ தண்ணீர் ஊற்றாத
நேற்று ஒரு நாளில் மட்டும்
பூக்காமல் போன பூக்களின் எண்ணிக்கை
ஒரு கோடி இருக்கும்
சூரியன் உதிக்காமல்
இருந்த நாள் கூட இருக்கும்
சூரியன் இல்லாமல் போகும் நாள்
நீ ஊருக்கு போன நாள் தான்
இப்போதுதான் தெரிகிறது
ஒரு நாளின் முழு நீளம்
நீ இல்லாமல்

November 06, 2008

உன்னோடு இருக்கும்
அழகான நிமிடங்களில்
நீ செய்யும் வேலையே ரசிப்பது
நான் விரும்பும் நிமிடங்கள்
நீ சுத்தம் செய்து முடித்து
ஓய்வாய் அமரும்போதுதான்
என் தேவதையின்
இன்னொரு முகத்தை நான் பார்க்கிறேன்
நீ வீட்டை சுத்தம் செய்யும் நேரத்தில்
நான் செய்யும் வேலைகளால்
நான் அழுக்காகிப் போவோம்
நீ சுத்தம் செய்யும் வீட்டில்
நான் குப்பை போடாவிட்டால்
வீடு எப்படி அழகாய் இருக்கும்?
சொர்க்கத்திலிருந்து வந்த நீ
உன் அழகான வேலைகளால்
நம் வீட்டை
சொர்க்கமாய் மாற்றிவிட்டாய்

November 05, 2008

நீ நீரெடுக்க ஆற்றுக்குள்
இறங்கும் போதெல்லாம்
ஆறு உன் அழகைக் கொஞ்சம்
திருடிக்கொள்கிறது
நீ வந்து தண்ணீர்
ஊற்றினால் மட்டும்தான்
இந்த ஆற்றங்கரை பிள்ளையார்
மற்றவர்களுக்கு வரம் தருகிறார்
உன் காலில் ஒற்றிக்கொண்டு
உன் வீடு வரை வரும்
ஆற்று நீர்த்துளியை போல்
என் மனதும்
உன்னோடு ஒட்டிக்கொண்டு போகிறது
உன் கொலுசின் இசை கேட்டு
ஆறும் கூட தன் ஓசையை நிறுத்தி
மௌனமாகிப்போகிறது
ஆற்றங்கரைக்கு நீ வந்து
உன் குடத்தை பாதியாகவும்
என் மனதை முழுதாகவும்
நிரப்பி விட்டு போகிறாய்

November 04, 2008

நீ வெட்கப்பட்டு சொல்லும்
சம்மதத்திற்க்காக
என் காதல் வெட்கமில்லாமல்
உன் முன் மண்டியிட்டு கிடக்கிறது
போரில் நிராயுதபாணியாய் நிற்கும்
மன்னன் போல்
உன் சம்மதம் சொல்லும்
கண்கள் முன் நின்றுபோகிறேன்
உன் சம்மதம்
என்ற புள்ளியை மையமாகக்கொண்டு
வரையப்பட்ட வட்டம்தான் என் நினைவுகள்
என்னுடைய எல்லா நிமிடங்களையும்
உனக்கே உயில் எழுதித்தருகிறேன்
உன் ஒற்றை சொல் சம்மதத்தை
மட்டும் எனக்குக் கொடு
உனக்காக நான் இருக்கும்
தவங்களுக்கு நீ கொடுக்கும் வரம்
உன்னுடைய சம்மதமாக இருக்குமா?

November 03, 2008

பிரம்மனே,
உன் வெள்ளை உடை தேவதைகளை விட
என் கருப்பு உடை தேவதைதான் அழகு.
நீல நிற உடைக்குள்
ஒளிந்து வருவது வான் நிலா,
கருப்பு நிற உடைக்குள்
ஒளிந்து வருவது என் நிலா
என் வண்ணமயமான வாழ்க்கைக்கு
உன் இந்த கருப்பு நிற
சம்மதமே போதும்
மழையில் தோன்றும்
ஏழு நிற வானவில்லும் கூட
உன் கருப்பு நிற உடையின்
முன் நிறம் மங்கிப்போகும்
பூக்கள் கருப்பு நிறத்தில்
பூக்காது என்று யார் சொன்னது?
உன் உடையின் நிறம் பார்த்துமா
இந்த கேள்வி?

October 29, 2008

நம் வீட்டிலிருக்கும் இந்த கிளிதான்
ஜோசியனின் சீட்டை எடுத்து
நம்மை சேர்த்து வைத்தது.
நம்மைச் சேர்த்ததோடு
நம்மோடு சேர்ந்தும் விட்டது
நீ சிவப்பாய் வெட்கப்படுவதைப்பார்த்து
ஐந்து நிறங்களில் வெட்கப்படுகிறது
நீ வளர்க்கும் உன் வீட்டு பஞ்சவர்ணக்கிளி
நீதான் என் வாழ்க்கையின்
ஜோசியக்காரி,
நான்தான் நீ வளர்க்கும் கிளி.
எனக்கு ஒரு நல்ல சீட்டு
எடுத்துக்கொடேன்
உன் வீட்டுக் கூண்டுக்குள்
சந்தோசமாய் சிறகடிக்கும்
உன் வீட்டுக் கிளியைப்போல்
உன் நினைவுகளில் நான்
சிறகடித்துக்கொண்டிருக்கிறேன்
சொன்னதைத் திருப்பிசொல்லும்
பழக்கத்தை மறந்து
உன் பெயரை மட்டும்
திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது
நீ வளர்க்கும் கிளி

October 23, 2008

நீ போடும் ரங்கோலி கோலம்
நீ வண்ணமாய் வெட்கப்படும்
பொலுதைப்பொல் இருக்கிறது  
நீ வாசலில் வரையும்
கோலங்களை காலம் அழிக்கலாம்,
ஆனால், உன்னால் என் மனதில்
வரையப்படும் கோலங்களை
உன்னால் கூட அழிக்கமுடியாது
ஏன் கடினப்பட்டு
கோலம் போடுகிறாய்?
உன் கால்தடங்களை
அப்படியே இட்டுவிட்டு போயேன்
பண்டிகை நாளில்
நீ கோலம் போடுகிறாயா?
இல்லை நீ கோலம் போடுவதால்
பண்டிகை நாளா?
இருக்கும் நட்சத்திரங்களை எல்லாம்
நீ எடுத்து
உன் கோலத்திற்கு
புள்ளியாக வைத்துக்கொண்டதால்
நிலா இப்போது தனியாக இருக்கிறது

October 21, 2008

நம் உயிர் இணையும் ஒப்பந்தத்தில்
நீ எப்போது உன் கையொப்பம் இடப்போகிறாய்?
நீ கையொப்பம் இடாதவரை
என் உயிர் ஒரு செல்லாத ஒப்பந்தம்.
நீ என்ன முடிவு சொல்வாய்
என்பது என்னுடைய பழைய கேள்வி,
என்னுடைய புதிய கேள்வியோ
நீ எப்போது சம்மதம் சொல்லப்போகிறாய்
நீ சொல்லும்
ஒற்றை சொல்லுக்கு பதிலாகத்தான்
நான் என்னை
உன்னிடம் அடகு வைத்திருக்கிறேன்
நீ இதழ் திறந்து கூட சொல்ல வேண்டாம்
உன் இமை மூடி சொன்னால் போதும்
நீ சொல்லும் சம்மதம்
என்ற ஒரு வார்த்தையில்தான்
நான் என்கின்ற
வார்த்தை முழுப்பொருள் தரும்

October 20, 2008

உன் கரம் பற்றும் போதெல்லாம்
நான் பறக்க ஆரம்பித்து விடுகின்றேன்,
என்னை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளேன்
நான் உன் கரம் பிடிக்கும்போது
பெரும் சந்தோசத்தைவிட
நீ என் கரம் பிடுக்கும்போது
பெரும் சந்தோசமே
நான் அடையும் சந்தோசம்
உன் கரம் பிடிக்கும்போதெல்லாம்
அம்மாவின் கரம் பிடிக்கும்
குழந்தையாய் மாறிப்போகின்றேன்
முதல் முறை உன் கரம் பிடித்தபோதே
நான் தெரிந்துகொண்டேன்
நீதான் நான் காலம் முழுதும்
உயிர் பிடிக்கும் சொந்தம் என்று

October 15, 2008

எல்லா திருமணங்களும்
பஞ்ச பூதங்கள் சாட்சியாக நடக்கும்
நம் திருமணமோ
அவைகளுக்கு சாட்சியாகவே நடைபெற்றது
நான்கு வேதங்களிலும்
நான் தேர்ந்தவன் என்றாலும்
நீதான் என்னுடைய முதல் வேதம்
மூன்று பக்கம் கடலாய்ப்போனால்
அது தீபகற்பம்
என் எல்லா பக்கங்களிலும் நீயே ஆனதால்
நான் இப்போது நின்கற்பம்
சூரியன் நிலவு என இரண்டு
ஒளி மூலங்கள் பூமிக்கு இருப்பதைப்போல்
என் வாழ்க்கைக்கு
நீயும் உன் நானும் மூலமாய் இருக்கிறோம்
என் ஒற்றை உயிரில்
ஒற்றை கயிற்றைக்கட்டி
ஊஞ்சல் ஆடும்
என் செல்ல தேவதை நீதான்

October 14, 2008

உயிர்களைப் பற்றிப் படிக்கும்
படிப்புக்கு உயிரியல் என்று பெயர்
நம் உயிரைப் பற்றி
நாம் படிக்கும் படிப்புக்கு
'காதல்' என்று பெயர் 
மக்களாட்சி, சர்வதிகார ஆட்சி
என்றெல்லாம் சொல்கிறது குடிமையியல்
ஆனால் என்னை ஆள்வதோ
உன் அன்பென்ற ஆட்சி
நிலங்கள் ஐந்து வகைப்படும்
என்கிறது புவியியல்
ஆனால்
என்னை எத்தனை வகைப்படுத்தினாலும்
நான்
நீயேதான் ஆகிறேன்
என் வாழ்க்கை வரலாற்றின்
எல்லா பக்கங்களிலும் இருக்கும்
ஒரே எழுத்து நீயேதான்
என் மனதின்
எல்லா வேதியியல் மாற்றங்களுக்கும்
உன்னுடைய பன்மொழி பேசும்
கண்கள்தான் காரணம்

October 12, 2008

நீ ஊஞ்சலாடிப் போனபின்
நானும் ஊஞ்சலும்
நீ ஆடிய ஆட்டத்தை ஆடிப்பார்ப்போம்
நீ ஊஞ்சலில் ஏறினால்
உனக்கு மட்டுமல்ல
ஊஞ்சலுக்கும் வயசு
குறைந்து விடுகிறது
சுற்றும் பூமியே
சுற்றுவதை விட்டுவிட்டு
நீ ஊஞ்சல் ஆடுவதை
வேடிக்கை பார்க்கும்போது
நான் உறைந்து போனதில்
ஆச்சர்யம் ஒன்றும் இல்லை

October 09, 2008

இன்று வரை
உன் வீட்டுக்கண்ணாடிக்கு மட்டுமே
நீ துயில் எழும் அழகைக்
காணக்கொடுத்து வைத்திருக்கிறது,
எனக்கு எப்போது?
நான் தூங்கும்போது
எனக்கு கனவு வேண்டாம்,
நீ தூங்கும்போது
உனக்கு என் கனவில்லா இரவுகள்
கனவுகளாக வரட்டும்
விடுமுறை நாட்களில்
காலைநேரத்துக்கும் முற்பகலுக்கும்
உன்னை எழுப்பி விட
பல சண்டைகள் நடக்கும்
நீ அதிகாலையில்
முறித்துப்போடும் சோம்பலில்
என்னுடைய பல புதுக்கவிதைகள்
பிறந்துபோகின்றன
உன் வீட்டு சேவல் கூட
நீ எழுந்ததால்தான் கூவுகிறது,
உன் வீட்டு உலகத்தைக் கூட
நீதான் விடியவைக்கிறாய்

October 08, 2008

நீ பிறந்தநாளில் கணிக்கப்பட்ட
காதல் பஞ்சாங்கம் நான்,
எனக்கு நேரங்களைக் கணிக்கும்
ஜோசியர் நீதான்
இந்த முறை உன் பிறந்தநாளைத்
தாங்கும் பாக்கியம்
வியாழக்கிழமைக்குக் கிடைத்திருக்கிறது
உன் பிறந்த நாள் பரிசாய்
என்ன தரலாம்?
உன்னையே நினைத்துக்கொண்டிருக்கும்
என்னுடைய மனசைத்தவிர
என்னிடம் ஏதும் இல்ல
உனக்கு வாழ்த்து சொல்வதற்க்காக
வானத்தில் இருந்த எல்லா விண்மீனும்
நிலாவைப் போய்விட்டதால்
எந்த நிலவு உணமையான நிலவு என்று
எங்களால் கண்டு பிடிக்கமுடியவில்லை
உன்னை போன்று இன்னொரு பெண்ணை
இதுவரை படைக்க இயலாததால்
வழக்கம் போல
இந்த ஆண்டும் உன் பிறந்தநாளில்
பிரம்மனே சிறந்த கலைஞன் விருது வாங்கினான்

October 07, 2008

ஊருப்போன நீ
சீக்கிரம் வர வேண்டும் என
வாசலில் கண்களையும்
உன்னில் நினைவுகளும்
வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன்
கிணற்றடியில்
நீ போட்டுவிட்டுப் போன வாளி
உனக்காக இன்னும்
தாகத்தோடு வாடிப்போய் கிடக்கிறது
நம் வீட்டு சமையலறையும்
நானும்
உன் வாசம் இல்லாமல்
தனித்துப் போயிருக்கிறோம்
பூப்பறிக்க நீ இல்லாததால்
நம் வீட்டுப்பூச்செடி
இப்போது பூக்கமாட்டேன் என்கிறது
நீ ஊருக்குப் போய்விட்டாய்
நான் உலகமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

October 06, 2008

பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலே வாசம் உண்டா
என எனக்குத் தெரியாது,
ஆனால்
உன் வீட்டுப்பூக்களுக்கு
இயற்கையிலே
உன் கூந்தலின் வாசம் உண்டு
என்பது மட்டும் எனக்குத் தெரியும் 
உன் கூந்தலேற
உன் வீட்டுப்பூக்களுக்குள் நடக்கும்
பனிப்போரில்
தோற்றுப்போனது என்னவோ
என் கைகள்தான்
கால்க்கட்டுப் போடப்பார்க்கும்
என் அம்மாவிடம் சொல்ல வேண்டும்
இவள் என்னை
அவளின் கூந்தலில் கட்டி விட்டாள் என்று
செடியிலிருந்து பறித்த போது
வாடிய பூ
உன் கூந்தல் ஏறியதும்
மீண்டும் பூத்து விட்டது
உன் ஒற்றைச்  சடையில்
என் அத்தனை உயிர் நாடிகளையும்
கட்டிப்போட்டு விடுகிறாய்

October 05, 2008

என்னதான் மருதாணி சிவந்தாலும்
நீ வெட்கப்படும் அளவுக்கு
சிவக்குமா என்ன ?
மருதாணிச் செடியிலிருந்து நீ பறித்த
எல்லா இலைகளும் சாபவிமோசனம்
பெற்று உன்னைச் சேர்ந்துவிட்டன
நீ அரைத்து வைத்த மருதாணியில்
சிவந்து போனது உன் விரல்களும்
தொலைந்து போனது மற்ற நிறங்களும்
மருதாணிச் செடியைப் பார்த்து
மற்ற எல்லாச் செடிகளும்
ஏங்கிப் போய்க்கிடக்கின்றன
அவைகளையெல்லாம்
நீ பூசமாட்டாயா என்று

உன் உள்ளங்கை பட்டதும்
வெட்கத்தில் சிவந்துபோனது
நீ வைத்த மருதாணி

October 02, 2008

இந்த சமையல் செய்த
உன் விரல்களுக்கு
மோதிரம் போட நூறு பேர் வரலாம்
ஆனால்
இந்த சமையல் செய்த
உன் விரல்களுக்கு
நானே மோதிரமாக வரவேண்டும்
நீ வைக்கும் படையலைத்தான்
சாமி கூட சாப்பிடுமாம்,
உன் பக்குவம்
அங்கேயும் கூட போய்விட்டதா?
உன் அம்மாவின் கைப்பக்குவம்
உனக்கு வந்ததாக
எல்லாரும் சொல்கிறார்கள்
ஆனால்
உன் பக்குவம்
உன் அம்மாவுக்கும் இருந்திருக்கிறது
என்பதுதான் சரி
அறுசுவை உணவோடு
உன் அன்பும் சேர்ந்து வரும்
உன் சமையலுக்கு பெயர்தான்
எழுசுவை உணவு
நீ சமைக்கும் சமையலில்
சுவையை விட
நீ சமைக்கும்போது
முனுமுனுக்கும் பாடலின்
சுவைதான் தெரிகிறது

September 29, 2008

இது 6  புள்ளி கோலம்
இது 8 புள்ளி கோலம்,
இது என் புள்ளி மான் வரைந்த கோலம்
எங்கே கண்டுபிடித்தாய்
வாசலில் கவிதை எழுத?
பூக்களை வைத்து வரைவதால்
அது பூக்கோலமா
இல்லை நீ வரைந்ததால் பூக்கோலமா?
நீ விடிகாலையில்
உன் வாசலில் கொட்டிப்போகும்
உன்னுடைய அழகைத்தான்
இந்த ஊர் கோலம் என்கிறது
நீ வரையும் மாக்கோலத்தில்
ஊரெங்கும் பரவிப்போகிறது
உன் பூக்கோலம்
ரோஜா வாசம்,
மல்லிகை வாசம் போய்
இப்போது உன்வீட்டு தோட்டத்தின்
எல்லா பூக்களிலும்
உன் வாசமே வீசுகிறது 
பூவோடு சேரும் நார்
மணக்குமா என்று எனக்கு தெரியாது
ஆனால்
உன் வீட்டு பூக்களோடு சேரும் நார்
கண்டிப்பாக மணக்கும்
நீ வளர்க்கிறாய் என்பதற்காக
உன்வீட்டு டிசம்பர் பூச்செடி
எல்லா மாதத்திலும் பூக்கிறது
நீ தொடும் இலைகள் எல்லாம்
பூக்களாய்ப் பூத்துவிடும் அதிசியம்
உன் வீட்டுத் தோட்டத்தில்
மட்டுமே நடக்கிறது
நீ தண்ணீர் ஊற்ற வேண்டும்
என்பதற்காகவே
உன் வீட்டு செடி
தினமும் வாடிப் போகிறது

September 28, 2008

என் அத்தனை பேச்சுக்கும்
உன் சிலவார்த்தைகள்தான்
தலைப்புசொர்க்களாகிப் போகின்றன 
நீ என்னுடன் இருக்கும்
பலமணி நேரங்களை விட
நீ பேசும் சில வார்த்தைகளிலேயே
என்னைக் கட்டிப்போட்டுவிடுகிறாய்
நான் தேடும் அத்தனை அன்பும்
நீ பேசும்
ஒன்றிரண்டு வார்த்தைகளுக்குள் தான்
ஜீவித்துக்கொண்டிருக்கிறது
உன்னுடைய
சில வார்த்தைகளை
மட்டுமே வைத்துக்கொண்டு
நான் என்னுடைய
பல வாக்கியங்களை வரைந்துகொள்கிறேன்
நான் உன்னிடம் நாள் முழுக்க பேசும்
வார்த்தைகளை விட
நீ என்னிடம்
பேசும் ஒரு வார்த்தையில் தான்
நம் காதல் ஒளிந்திருக்கிறது

September 25, 2008

சிப்பிக்குள் விழும்
மழைத்துளிதான் முத்தாகுமாம்
அது எனக்குத் தெரியாது,
உன்மேல் விழும் துளி தான் வைரம் ஆகும்
உன்னுடைய தேவதைத் தோழிகள்
அவர்களின் தெய்வமான உனக்குச்
செய்யும் நீராபிஷேகம்தான் இந்த மழையோ?
மழையில் நீ நனையும்
நேரங்களை விட
மழை உன்னை நனைக்கப் பார்க்கும்
நேரங்கள் அதிகமே
நீ மழையில் நனைந்த நாட்களை
என் டைரியின் நனைந்த நாட்கள்
குறித்துவைத்திருக்கின்றன
நீ நனைந்த முதல் மழை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
நானும், உன் மேல் விழுந்த மழைத்துளியும்
இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறோம்

September 24, 2008

மாலையில்
நீ மிச்சம் வைத்து ஊற்றிய
நீரைக்குடித்த மரமும் கூட உனக்காகத்தான்
ஒற்றை காலில் நின்றுகொண்டு
தவம் செய்துகொண்டிருக்கிறது 
உன் வகுப்பு சிலேட்டில்
நீ எழுதிய 'அ' , 'ஆ'
எழுத்துக்களை வைத்துதான்
இப்போதைய இலக்கியங்கள்
உருவாகிக்கொண்டிருக்கின்றன
நீ திருவிழாவில்
வாங்கிய பொம்மைகளை எல்லாம்
எடுத்துக்கொண்டுபோன காலம்,
இப்போது உன்னால்
எனக்கு பல திருவிழாக்களை
கொடுத்துக்கொண்டிருக்கிறது
நீ மழையில் அப்போது
விட்ட கப்பல்கள் எல்லாம்
இப்போது உன்னைக் காணாமல்
எங்கேயோ போய் மூழ்கிவிட்டன
உனக்கு பாடம்
சொல்லிக்கொடுத்த ஆசிரியர்
கண்ணால் பேசுவதையும்
சொல்லிக்கொடுத்தாரா என்ன?

September 23, 2008

பல சங்கங்கள் வைத்து
பல மொழிகளை வளர்க்கும் எனக்கு
உன் கண்கள் பேசும் மொழியை
புரிந்துகொள்ள இன்னும் தெரியவில்லை 
பல நாடுகள்
எனக்கு கப்பம் கட்டுகின்றன,
நானோ உன் வார்த்தைகளுக்கு
கப்பம் கட்டிக்கொண்டிருக்கின்றேன்
போர்களுக்கு மன்னனாக
இருந்த நான்
இப்போது உன் கூந்தல்
பூக்களின் மன்னனாகிப்போனேன்
நான் பல நாடுகளுக்கு
போர்மேகமாய் இருந்திருக்கிறேன்,
நீயோ எனக்கு காதல் மேகமாகிப்போனாய்
என் வாளுக்கு இரையானோர்
ஆயிரம் ஆயிரம் பேர்,
ஆனால் நானோ உன் பார்வைக்கு
இரையாகிப்போனேன்.
என் மொத்த அரசாங்கத்தையும்
விட்டு விட்டு வந்துவிட்டேன்,
என்னை எப்போது அரசாளப்போகிறாய்?

September 17, 2008

உன்னை இவ்வளவு அழகாக
புகைப்படம் எடுக்கும்
அந்த நபருக்கு பெயர்தான் கலைஞன்
ஒவ்வொரு புகைப்படத்திலும்
ஒவ்வொரு மொழி பேசும் நீ
என்னிடம் மட்டும்
ஏன் மௌன மொழியில் பேசுகிறாய்?
எப்போதுமே ஏன் நீ பூக்களோடே
புகைப்படம் எடுக்கிறாய்
இல்லை இல்லை
ஏன் எப்போதும் பூக்கள்
உன்னோடே புகைப்படம் எடுத்துக் கொள்கின்றன?