நம் மனசுக்குள் கேட்கும் கெட்டிமேளச்சத்தம், இடையில் இருக்கும் நாட்களுக்குக் கேட்கவில்லையோ? இவ்வளவு மெதுவாக நகர்கின்றன
அடைமழை நாளில் குடையை மறந்து வந்ததும் கூட நல்லததுதான். என்னைச்சேர்க்க குடையுடன் நீ, நம்மைச்சேர்க்க இடியுடன் மழை.
December 27, 2010
உன் மௌனம் எனக்குப் பழகிப்போன ஒன்றுதான், ஆனால் என் திருமணத்திற்கு அவசரப்படும் என் அம்மாவிற்கு உன் மௌனத்தை எப்படிப் புரியவைப்பது?
December 26, 2010
நீயும் நானும் எதிரெதிர் துருவங்கள்தான், ஆனால் ஏனோ இன்னும் ஒட்டிக்கொள்ளவில்லை
December 25, 2010
உன் மௌனம் என்னும் நெருப்பில் என்னுடைய சொற்கள் அனைத்தையும் எரித்துப்போய் விட்டாய். சொற்கள் மட்டும்தான் தீர்ந்துபோய்விட்டன, ஆனால் அந்த நெருப்பையும் அணைக்கும் என் காதல் ஊற்றுக்கள் இன்னும் வற்றிப்போய்விடவில்லை
December 22, 2010
என் கடிகாரத்தின் ஒவ்வொரு வினாடியும் கூட நான் தவறவிட்ட உன் மார்கழி ஈரக் கூந்தலையும் நீ வரையும் ஓவியக் கோலங்களையும் நினைவு படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன
நான், நீ, குங்குமம், மஞ்சள் அனைத்தும் எப்போதோ தயார், ஆனால் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட மணநாள் மட்டும் ஏனோ இன்னும் தூரத்தில்
December 21, 2010
முட்கள் நிறைந்த மூங்கிலாய் இருந்த நான், உன்னால் இப்போது காற்றை வாங்கி இசையாக்கும் புல்லாங்குழல் என மாறிப்போயிருக்கிறேன்
December 15, 2010
காட்டுத்தீயைப் போல் கொழுந்துவிட்டு எரியும் நம் பிரிவில் அவ்வப்போது அணைக்க வந்து போகும் மழைத்துளிகள் போல் கரிசனம் தருகின்றன உன் மின்னஞ்சலின் கொஞ்சலும் உன் தொலைபேசி முத்தமும்
கடன் அன்பை முறிக்குமாமே? நமக்கேன் அந்த வம்பு! என்னிடம் வாங்கிய முத்தங்களை திருப்பிக் கொடுத்துவிடு. வட்டியோடு வந்தால் மிக்க சந்தோசமே!!!
December 12, 2010
உன்னைப்பற்றியான இரண்டு வரிகளுக்கு அறுபது நிமிடங்கள் யோசித்தேன், வந்துபோனதேன்னவோ உன்னுடைய அறுபதனாயிரம் பிம்பங்கள்தான்
December 11, 2010
உன்னுடைய சுயம்வரத்தில் மற்ற தேசத்து இளவரசர்களை தோற்கடித்தவன் நான், உனக்கு மாலையிட்ட பின் உன்னிடம் அடிமையாகிப்போனேன்
December 09, 2010
வரலாறு சொல்லும் பசலை நோய்க்கு தலைவிகள் மட்டுமல்ல, நானும் கூட வாய்ப்பட்டவன்தான்
கதை நாயகியின் பெயரும் உன் பெயரும் ஒன்றாய் இருப்பதால், கதையே இல்லாத திரைப்படம் கூட மிக இனிமையாகத்தான் இருக்கிறது
December 08, 2010
நீ கொடுக்கும் முத்தத்தில் சத்தத்தை மட்டும் எனக்குக் கொடுத்துவிட்டு மற்ற எல்லாவற்றையும் திருடிக்கொள்கிறது இந்த பொல்லாத தொலைபேசி
December 06, 2010
எங்கேயோ எப்படியோ எதாவது ஒரு திரைப்படப்பாடலின் வரி, உன்னைப்பற்றியோ என்னைப்பற்றியோ இல்லை நம்மைப்பற்றியோ நினைக்க வைக்கத்தான் செய்கிறது
காகிதத்தில் என் காதலை எழுதும்போது கிடைக்கும் ஆயிரமாயிரம் வார்த்தைகள், உன்னை நேரில் பார்க்கும்போது எங்கே ஓடிப்போகின்றன?
December 02, 2010
உலகின் தலைசிறந்த ஓவியர் நீ, உன் தலைசிறந்த ஓவியம் - கடற்கரையில் உன் கால் பதியங்கள்
November 30, 2010
நான் கன்னத்தில் கை வைத்தேன் கப்பல் ஒன்றும் கவிழ்ந்து போகவில்லை, நீ கன்னத்தில் கை வைத்தாய் நானே கவிழ்ந்து போனேன்
November 28, 2010
நான் எழுதும் வரிகள் எல்லாம் உன்னைப்பற்றிதான் என்று தெரிந்தும், பதில் சொல்லாமல் பாராட்ட மட்டும் செய்கிறாயே, இது என்ன நியாயம்?
கல்லூரி - நமது வகுப்பறை நீ வரும் முன்னே நான் நடத்திக்கொண்டிருக்கிறேன் ஒரு போர்க்களம், நீ வந்த பின் எனக்குள் ஆரம்பிக்கிறது ஒரு போர்க்களம்
November 25, 2010
கல்லூரி மகளிர் விடுதிச்சாலை - ஆயிரம் மகளிரின் கால்தடங்கள் மண்ணில் பதிந்தாலும், நான் தேடுவது என்னமோ உன் காலடித்தடம் தான்
கல்லூரித் தமிழ் மன்றம் - கவிதைப் போட்டி நீ எழுதிய கவிதைக்கு முதற் பரிசா? நீ கவிதையாய் இருப்பதனால் முதற் பரிசா?
November 24, 2010
கல்லூரி - நாம் நடந்துபோகும் சாலை நீ வரும்போது உன் மீது அர்ச்சனை செய்ய ஆயிரமாயிரம் மலர்களோடு மரங்கள், உன் மேல் விழும் மலர்களை சேகரிக்க உன் பின்னே நான்...
November 23, 2010
கல்லூரி பேருந்து நிறுத்தம் - நான் போகும் பேருந்துகள் எல்லாமே பாலைவனம், நீ செல்லும் பேருந்து மட்டுமே எனக்கு சோலைவனம்
கல்லூரி கணினி ஆய்வகம் - இயந்திரத்தின் மென்மொழியை எளிதில் கையாளும் நான், உன் விழி பேசும் மொழியில் தடுமாறித்தான் போகின்றேன்
November 20, 2010
வர்ணங்களில் வெட்கப்பூ பூக்கும் ஒரு நடமாடும் செடி நீ, உன்னை வருடிப்போக மட்டுமே வரும் தென்றல் நான்
கல்லூரி இயற்பியல் ஆய்வகம் - என்னைக்கடந்து செல்லும் நீ வீசிப்போகிறாய் ஒரு ஒற்றைப்பார்வை, என் உயிரியலில் ஆரம்பிக்கின்றன அழகிய வேதியியல் மாற்றங்கள்
November 19, 2010
உன் வெட்கத்திடம் என் மனமும், உன் மெளனத்திடம் என் கடித வரிகளும் தோற்றுத்தான் போகின்றன
November 18, 2010
திருமண மாலைக்கான பூக்கள் பூத்துவிட்டன இன்னும் ஏனோ நாட்கள் மட்டும் தூரத்தில்
November 16, 2010
என்னிடம் உன் முதல் வார்த்தையும் உன்னிடம் என் முதல் கவிதையும் பரிமாற்றம் ஆன நேரம்தான் நம் முதல் சந்திப்பு
November 14, 2010
நீ தொடுக்கும் மலர்ச்சரத்தில் பூக்களுக்குள் இருக்கும் இடைவெளியில் புரிகிறது, நம் பிரிவின் உன் வலி
November 13, 2010
என் தனிமை நிமிஷங்களும் உன் தனிமை நிமிஷங்களும் நம் பிரிவு நாட்களின் மணித்துளிகளை நீளமாக்குகின்றன
இப்போது நான் உன்னைப் பிரிந்திருப்பதால் நீ மலர்களை சூடுவதே இல்லையாமே? உன் வீட்டு பூச்செடி எனக்கு காற்றுவழிச் செய்தி அனுப்பியிருக்கிறது
November 11, 2010
உனது வலது கை அறியாமல் உன் இடது கையில் ஒளிந்திருக்கும் கைக்குட்டையைப் போல், எனக்குள்ளே ஒளிந்து போகிறாய் யாரும் அறியாமல்
November 09, 2010
தேசங்களின் எல்லைக்கோடுகள் எல்லாம் தேசங்களைப் பிரிக்கவே, உன்னையும் என்னையும் பிரிக்க அல்ல.
November 08, 2010
ஏழு நிறங்களிலும் வெட்கப்படும் ஓவியம் நீ, வரையும் தூரிகை நான்........
October 27, 2010
நட்சத்திரங்கள் ஆயிரம் இருந்தாலும், வானமாகிய நான் என் பெண் நிலவுக்குத்தான் அடிமை
October 26, 2010
அடுத்த பௌர்ணமிக்காக ஏங்கும் நட்சத்திர வானம் போல, அடுத்த உன்னுடைய சந்திப்புக்காக ஏங்கும் நான் - உன் காதலன்
October 24, 2010
உனக்குத் தெரியாமல் போன உன்னுடைய இன்னொரு இணைத் தண்டவாளம் நான், நீ எங்கு போனாலும் இணையாகவும் அருகிலும் நானே
October 07, 2010
உன்னைப்பற்றியோ அல்லது என்னைப்பற்றியோ பேசினால் பதில் பேசும் நீ, நம்மைபற்றிப் பேசினால் மட்டும் ஏனோ மௌனமாகி விடுகிறாய்
October 06, 2010
உன்னுடைய மௌனமும் நமக்குள் இருக்கும் இந்த நீண்ட தொலைவும்தான், எனக்கும் நம் காதலுக்கும் இருக்கும் இடைவெளி. தொலைவும் மௌனமும் தொலைவது எப்போது?
October 05, 2010
நான் சரிசெய்வதர்க்க்காகவே நீ கோணலாய் பொட்டு வைக்கிறாய், நான் சரிசெய்கிறேன் என்கிற சாக்கில் மறுபுறம் கோணலாக்கிவிடுகிறேன் மீண்டும் சரிசெய்ய நான்தானே வர வேண்டும் !!
October 04, 2010
எவ்வளவுதான் போரிட்டாலும் உன் மெளனத்திடம் என் சொற்கள் தோற்றுத்தான்போகின்றன
September 29, 2010
உன் கண்களை நேர்நோக்கிப் பேசும் சக்தி எனக்கிருந்திருந்தால் என்னிடம் இத்தனை காதல் புலம்பல்கள் இருந்திருக்காதோ?
September 28, 2010
உனக்குத் தெரியாமல் நானும், எனக்குத் தெரியாமல் நீயும், நமக்காகக் காத்திருக்கிறோம்...
September 21, 2010
உன் வெட்கம் என்னும் மந்திரக்கோலில் என்னை ஆட்டுவிக்கும் ஒரு மந்திரக்காரி நீ ....
September 20, 2010
உன் பதில் மௌனமாய்த்தான் இருக்குமென்று தெரிந்தாலும் உனக்கான என் கடிதங்கள் பேசிக்கொண்டேதான் இருக்கும்....
September 15, 2010
நம் பழைய புகைப்படங்கள் புதிய சந்தோஷங்களை உருவாக்குகின்றன ..............
August 22, 2010
நீ புது ஆடை அணியும்போதேல்லாம் ஒரு புது அவதாரம் எடுக்கிறாய், உன்னுடைய அடுத்த அவதாரம் எப்போது?
August 19, 2010
நான் குழப்பத்தில் இருக்கிறேன் நீ அழகாய் இருக்கிறாயா? இல்லை என் காதல் உன்னை அழகாய்க் காட்டுகிறதா?
August 18, 2010
உன்னை ஒவ்வொருமுறை சந்திப்பதும் நீ தெருமுனையில் தலை திருப்பி விடைபெறும் அழகைக் காணவே ..
August 14, 2010
உன் காலடித்தடம் வரைந்த கோலங்களை திருடப்பார்க்கிறது, இந்த பொல்லாத சமுத்திரம்
August 03, 2010
என்னை உனக்காகத் தோற்றுவித்த இந்தக் காதலுக்கு நான் செய்யும் கைமாறு உன்னைக் காதலிப்பதுதான்
நான்தான் ஆகாயம் என் வருடத்தின் 365 நாள் முழுமதி நீ
உன்னுடைய அடுத்த காரணப் பெயர் - சிவப்பு நிற வெட்கம்
உன்னைப் பார்க்கும் போது நான் கவிஞன் ஆனேன் என்று ஊர் சொன்னாலும், உன்னைப் பார்க்கும் போது நீ என்னைக் கவிஞன் ஆக்குகிறாய் என்பதே உண்மை
August 02, 2010
நம் பார்வைகள் மோதிக்கொள்ளும் அந்த ஒரு வினாடியில் என் உடம்பின் ஒட்டு மொத்த செல்களும் அடங்கிப் போகின்றன
உன் முகத்தில் தெரியும் அந்த சிறு அமைதியில் என் அத்தனைப் போர்க்களங்களிலும் பூக்கள் பூத்துப் போகின்றன
நீ வைத்திருக்கும் மல்லிகைப் பூக்களின் வாசத்திற்கும் சேர்த்து நான் மயங்கிப் போகிறேன்
August 01, 2010
வெட்கத்தின் உண்மையான அழகு நீ வெட்கப்படும்போதுதான் ஒளிரும்
நான் தேடும் அமைதி உன்னில் நீ தேடும் காதல் என்னில்
நாளைக்காவது உன்னைக் காண்பேனா? நீ இல்லாத நெருப்பு நிமிடங்கள் என்னைத் தின்றது போதும்
உன் நினைவுகளில் நானும், என் இரவு வினாடிகளும் தொலைந்து போகின்றோம்
உலகின் மிக அழகான பூ எது? என்னுடைய இன்றைய பதில்: (நீ சூடியிருக்கும்) மல்லிகை
July 25, 2010
உன்னைக் காதலிக்க ஆரம்பிக்கும் முன் எல்லாப் பெண்களிலும் அழகு தெரிந்தது, உன்னைக் காதலிக்க ஆரம்பித்த பின் எல்லாப் பெண்களிலும் நீயே தெரிகிறாய்
காதல் ஒரு அழகு - காதலில் ஜெயித்தவனின் வரி காதல் ஒரு வலி - காதலில் தோற்றவனின் வரி காதல் ஒரு அழகான வலி - உன்னைப் பற்றி நினைக்க ஆரம்பித்திருக்கும் என்னுடைய வரி
ஒரு நாளைக்கு 1440 தித்திப்பு நிமிடங்கள் இருப்பது உன்னை நினைக்க ஆரம்பித்த பிறகுதான் தெரிகிறது
எங்கே கற்றுக்கொண்டாய் உன் நினைவுகளை மட்டுமே கொண்டு என்னைக் கொல்வதற்கு?
புல்வெளியைக் குளிப்பாட்டும் காலைப் பனித்துளி போல், என்னை ரம்மியமாக்குகின்றன உன் அழகு நினைவுகள்
என்னுடைய அத்தனை உள்நாட்டு போர்களையும் உன்னுடைய ஒரு சிறிய புன்னகை துகள் துகளாக்கி விடுகிறது
உன்னைப்பற்றி யோசிக்கும்போது வரும் இவ்வளவு வார்த்தைகளும் உன்னை நேரில் பார்க்கும்போது ஏனோ மௌனங்களாக மாறிப்போகின்றன
உன்னை நினைக்க ஆரம்பித்த உடனே எங்கோ இருந்து வரும் சந்தோசம் என் முகத்திலும் மனதிலும் ஒட்டிக்கொள்கிறது
காதல் அழகு என்று கேள்விப்பட்டிருக்கிறேன், உன்னை நினைக்க ஆரம்பித்த பிறகுதான் தெரிகிறது அது பேரழகு என்று
July 24, 2010
நீ உன் கண்களுக்கு வெளியே கருப்பு மை தீட்டிகொண்டாய், நானோ என் கண்களுக்கு உள் உன்னை வண்ணமாய்த் தீட்டிக்கொண்டேன்
காதலுக்கென தனி மொழி இருக்கையில் உனக்கும் எனக்கும் எதற்கு தனி மொழி?
நீ பிரம்மன் எழுதிய கடைசிக் கவிதை இது நான் எழுதும் முதல் கவிதை
என் அறிமுகம் இல்லாத உனக்கு என்னை அறிமுகம் செய்ய முனைகின்றன என் வரிகள் நானும் என் வரிகளும் காத்திருக்கிறோம் உன் ஒற்றை ஒப்புதல் வேண்டி
வேதியியலில் வினையூக்கி போலே நீ அணியும் ஆடைகள் எல்லாமே உன் அழகூட்டிகள்
உன் கருப்பு உடையும் வெள்ளை மல்லிகையும் இணைந்து எனக்குள் புரிகின்றன வர்ணமாயங்கள்
ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட என் கடிதத்திற்கு, உன் ஒற்றைப் பதில் - இந்த அழகுப் பார்வை
ஒரு மெல்லிய மயில் தோகையின் வருடலை உன் மெல்லிய துப்பட்டாவின் வருடலில் உணர்கிறேன்
July 22, 2010
உன்னுடைய ஒவ்வொரு புதிய புகைப்படத்திலும், பழைய புகைப்படத்தை விட பல மடங்கு அழகாய்த் தெரிகிறாய்